scorecardresearch

ஆளுனர் தமிழிசை, எம்பி விஜய் வசந்த்… பிரபலங்கள் பங்கேற்கும் தமிழா தமிழா விருது நிகழ்ச்சி

Tamil Reality Show : சாமானியனாக இருந்து இந்த சமூகத்திற்கு பங்காற்றிய அறியப்படாத ஹீரோக்களை ஊர் அறிய கௌரவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

ஆளுனர் தமிழிசை, எம்பி விஜய் வசந்த்… பிரபலங்கள் பங்கேற்கும் தமிழா தமிழா விருது நிகழ்ச்சி

Zee tamil Thamizha Tamizha Award Function Update : ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில் மற்ற சேனல்களுக்கு இணையாக வந்துகொண்டிருக்கும் ஜீதமிழில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார்.

குரலற்றவர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முன்னெடுப்பாக தமிழா தமிழா விருதுகள்- 2022 நடத்தப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை திரு. கரு.பழனியப்பன் மற்றும் மிர்ச்சி விஜய் இனைந்து தொகுத்து வழங்கியுள்ளனர்.

சாமானியனாக இருந்து இந்த சமூகத்திற்கு பங்காற்றிய அறியப்படாத ஹீரோக்களை ஊர் அறிய கௌரவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். இந்த விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன், மாண்புமிகு தமிழக சுற்றுளா துறை அமைச்சர் திரு.மதிவேந்தன், கன்னியாகுமாரி எம்பி திரு.விஜய் வசந்த், ஊடகவியாளர்கள் திரு.நக்கீரன் கோபால், திரு. கார்த்திகைச்செல்வன், திரைப்பட இயக்குனர் திரு. டி.ஜெ.ஞானவேல் அவர்கள், திரு.ஆர்.ஜே. பாலாஜி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்.ஜே பாலாஜி திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்துள்ளார். இதைப்போல் பல நெகிழ்ச்சியான தருணங்கள் விழா மேடையில் அரங்கேறி காண்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12மணிக்கு ஒளிபரப்பாகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil reality show thamizha thamizha award 2022 update