Advertisment

இங்க க்ராண்ட், அங்க சிம்பிள்: மாப்பிள்ளை எந்த பக்கம்?

ஜீ தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sr nk

மாயாவின் என்ட்ரி.. காப்பாற்றப்பட்ட ரகுராமின் மானம்சீனு வாழ்க்கையில் அடுத்து என்னசந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் பஞ்சாயத்தில் குற்றவாளியாக நின்ற நிலையில் இன்றுரகுராம் பஞ்சாயத்தில் குற்றவாளியாக நிற்க அவருக்கு தண்டனை எல்லாம் வேண்டாம் என்று ரகுராம் குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் சொல்கின்றனர். லிங்கம் ஏற்பாடு செய்த ஆள் இந்த விதிமுறைகளை கொண்டு வந்ததே அவர் தானேஊருக்கு ஒரு சட்டம் அவருக்கு ஒரு சட்டமா என்று கேட்க ரகுராம் உங்க கடைமையை நீங்க செய்யுங்க என்று சொல்கிறார்.

அதன் பிறகு ரகுராம் இடுப்பில் துண்டை கட்டி கொண்டு காலில் விழ தயாராக மழை கொட்ட தொடங்க ஊர் மக்கள் எல்லாரும் தலை குனிந்து நிற்கின்றனர். அடுத்து ரகுராம் மண்டியிட்டு குனிய போகும் சமயத்தில் ஒரு கார் வந்து நிற்க என் பெரியப்பா யார் காலிலும் விழ கூடாது என்று ஓடி வந்து ரகுராமை தடுத்து நிறுத்துகிறாள். எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் என்று மாயாவை திட்ட லிங்கம் சொன்னது போல எங்களுக்கு கல்யாணம் ஆகல என்று உண்மையை உடைக்கிறாள் மாயா.

என் பெரியப்பா கொடுத்த வாக்கு தவறி போகலஅப்படி இருக்கும் போது இந்த பிராது எப்படி செல்லுபடியாகும்புகார் வந்தா முழுசா விசாரிக்க மாட்டீங்களா என்று கோபப்படுகிறாள். அடுத்து லிங்கம் லெட்டர் எழுதி வச்சிட்டு எதுக்கு ஓடி போனீங்க என்று கேள்வி கேட்க அது எங்க குடும்ப விஷயம்அதை நாங்க பார்த்துகிறோம் என்று ரகுராமுடன் கிளம்பி வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு வந்த சீனுமாயாவை ரமணி நில்லுங்க என்று சத்தம் போட்டு வாசலில் நிற்க வைக்கிறாள்.

எதுக்கு இப்படி பண்ண என்று மாயாவையும் திட்டுகிறாள். மேலும் அவ கூப்பிட்டா நீ போய்டுவியா டா உனக்கு எங்க போச்சு அறிவு என்று ஆவேசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பர்ப்ப எழுந்துள்ளது.

பீல் பண்ண மதுமிதா.. கௌதம் கொடுத்த ஷாக் சர்ப்ரைஸ் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட் 

நெஞ்சை கிள்ளாதே. சீரியலின் நேற்றைய எபிசோடில் சகுந்தலா கல்யாண நாள் குறித்ததும் கல்யாணத்தை பெருசா கிராண்டா பண்ணனும், எங்க சைட்ல இருந்து குறைஞ்சது பத்தாயிரம் பேர் வருவாங்க என்று சொன்னதும் ரேணுகா அதிர்ச்சியான நிலையில் இன்று சகுந்தலா சொன்னதை கேட்டதும் மதுமிதா குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மதுமிதாவின் அப்பா வருத்தப்பட்டு வெளியே சென்று விடுகிறார்.

பிறகு மது அப்பாவிடம் என்னாச்சு என்று கேட்க கல்யாணத்தை சிம்பிளா நினைச்சா மாதிரி நடத்தணும்னு ஆசைப்பட்டேன் ஆனால் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாத்தையும் கிராண்டா எதிர்பார்க்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார். இதைக் கேட்டு மதுவும் வருத்தமாக இருக்க அந்த வழியாக வந்த கௌதம் என்னாச்சு என்று கேட்க மதுமிதா அப்பா என் கல்யாணத்தை சிம்பிளா நடத்தணும்னு ஆசைப்பட்டாரு என்று சொல்கிறாள். எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விடுகிறான் கௌதம்.

இதைத்தொடர்ந்து இன்னொரு பக்கம் சகுந்தலா மற்றும் கௌதமின் மாமா என இருவரும் கல்யாண பேச்சை எடுத்ததும் மதுமிதா குடும்பத்தோட முகமே மாறிப்போச்சு என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு எல்லோரும் வீட்டுக்கு கிளம்பும் நேரத்தில் கௌதம் கல்யாணத்துல ஒரு சேஞ்சஸ் என சொல்ல அனைவரும் என்னவென்று தெரியாமல் முழிக்கின்றனர்.பிறகு என் தங்கச்சியோட கல்யாணம் பிளான் பண்ண மாதிரி பயங்கர கிராண்டா நடக்கும்

 அதே சமயம் என்னுடைய கல்யாணம் மதுமிதாவோட அப்பா ஆசைப்பட்ட மாதிரி சிம்பிளா கோவில்ல தான் நடக்கும் என சொல்ல சகுந்தலா குடும்பத்தினர் ஷாக் ஆகின்றனர்.  மது மட்டும் கௌதம் தன்னை புரிந்து கொண்டதை நினைத்து சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment