மாயாவை மகளாக தத்தெடுத்த ரகுராம்.. கல்யாணத்தில் காத்திருந்த ட்விஸ்ட்
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சர்வர் வேலை செய்த ரகுராமை சிவராமன் உட்பட எல்லாரும் சேர்ந்து சென்று மீட்டு அழைத்து வந்த நிலையில் இன்று, ரகுராம் எல்லாரையும் கோவிலுக்கு வர சொல்லி கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார். கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாரும் ரகுராமிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கின்றனர்.
ரமணி தப்பு பண்ணிட்டேன் என்று உடைந்து போய் கண் கலங்க ரகுராம் அதெல்லாம் ஒன்னும் இல்ல மா என்று அவளை சமாதானம் செய்கிறார். இதை தொடர்ந்து யாகம் நடக்கும் இடத்திற்கு ரகுராம் எல்லாரையும் அழைத்து செல்கிறார். மாயாவை நான் என்னுடைய மகளாக தத்தெடுக்க போவதாக சொல்ல எல்லாரும் ஷாக்காக ஜானகி எமோஷனலாகிறாள்.
இறுதியாக மாயாவை அக்கினி சாட்சியாக தனது மகளாக தத்தெடுத்து கொள்கிறார். பிறகு மாயாவுடன் வீட்டிற்கு வர ஜானகி அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறாள். புவனேஸ்வரி, லிங்கம் ஆகியோர் வீட்டிற்கு வர ரகுராம் என்னுடைய முடிவில் நான் உறுதியாக இருக்கேன், உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த கல்யாணத்த நடத்தலாம் என்று சொல்கிறார்.
அடுத்து புவனேஸ்வரி வேறு வழியின்றி வன்மத்தை மனதில் மறைத்து கொண்டு எனக்கு சம்மதம் என்று சொல்லி தட்டை மாற்றி கொள்கிறாள். இப்படியான நிலையில் ஒட்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விறுவிறுவென நடக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள்.. விருப்பமின்றி இருக்கும் கௌதம்
நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க மதுவும் சம்மதம் சொன்ன நிலையில் இன்று, கௌதம் மதுவிற்கு போன் செய்து நைட் 10:30 மணிக்கு மேல் நிச்சயத்தை வைத்து கொள்ளலாம், எனக்கு வேலைகள் இருக்கு அதை முடித்து விட்டு வருவதாக சொல்ல மதுவும் சரி என்று சொல்கிறாள்.
அதன் பிறகு வீட்டில் விஷயத்தை சொல்ல நைட் 10:30 மணிக்கு யாருடி நிச்சயத்துக்கு வருவாங்க என்று கேள்வி கேட்க வருவாங்க என்று சொல்கிறாள். அடுத்ததாக இரண்டு குடும்பமும் நிச்சயத்துக்கு மோதிரம் எடுக்க முடிவெடுக்கின்றனர். கௌதம் குடும்பத்தினர் நகைக்கடைகாரரை வீட்டிற்கே வர வைத்து மோதிரத்தை பார்க்க கௌதம் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் சகுந்தலா எடுப்பதற்கெல்லாம் ஓகே என்று சொல்லி கொண்டிருக்கிறான்.
மறுபக்கம் கடைக்கு வந்த மதுமிதா குடும்பம் சைஸ் தெரியாமல் பெரிய சைஸ் மோதிரமாக பார்த்து கொண்டிருக்கின்றனர். அடுத்து நிச்சயத்துக்கான ஏற்பாடுகள் நடக்கிறது, மதுமிதாவுக்கு மேக்கப் போட்டு கௌதம் வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். சந்தோஷ் மற்றும் அவனது மனைவி என இருவரும் சேர்ந்து கௌதமுக்கு காஸ்டியூம் தேர்வு செய்து கொடுக்கின்றனர். ரேணுகா எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும் என்று வேண்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“