என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? அப்போது இது பாட்டு ஷோ இல்லையா? சரிகமப வீடியோ வைரல்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஷோ தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஷோவாக மாறியுள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஷோ தற்போது நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஷோவாக மாறியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sarigama Pa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கும் சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. ரியாலிட்டி ஷோக்களில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சரிகமப ஷோ மக்கள் மத்தியில் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Advertisment

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட் நடத்தப்பட்டு வருகிறது, இதில் கடந்த வாரம் இளையாராஜாவின் பாடல்களை தேர்வு செய்து பாடும் சுற்று நடைபெற்றது. அப்போது இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். இதனை தொடர்ந்து இந்த வாரம் மணிரத்தினத்தின் மௌனராகங்கள் சுற்று ஒளிபரப்பாக உள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அதாவது, சரிகமப போட்டியாளர்கள் அனைவரையும் நடிகர்களாக்கி வித்தியாசமான முறையில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சிங்கிங் ஷோனு தானே சொன்னீங்க, ஆனால் கண்டெஸ்டன்ட் எல்லாம் பயங்கரமாக ஆக்ட் பண்றாங்க என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இன்னொரு ப்ரோமோ வீடியோவில் வீராப்பாண்டி பாடிய பாடலை கேட்ட நடுவர்கள் இது பிளாட்டினம் பெர்பாமன்ஸ் என பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: