சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜீ தமிழின் சீதாராமன் சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும்ட வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் சீதாராமன். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் விலகியதை தொடர்ந்து நடிகை பிரியங்கா சீதாவாக நடித்து வருகிறார்.
பிரம்மா ஜி.தேவ், செல்வம் சுப்பையா மற்றும் கே.கந்தசுவாமி ஆகியோரின் ஆகியோரின் கதை திரைக்கதை இயக்கத்தில், வெளியாகியுள்ள சீதாராமன் சீரியலில், ஸ்ரீ பிரியங்கா, ஜே டி'சோசா மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். காதல், நட்பு மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
நாயகனின் மாற்றாந்தாய்க்கும் மருமகளுக்கும் இடையே நடக்கும் எலி பூனை மோதலை அடிப்படையாக கொண்ட இந்த சீரியல் தற்போது முடிவை நெருக்கி வரும் நிலையில், இறுதி எபிசோடுகள் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“