ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகை ராணி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக விஜய் டிவி நடிகை நடித்து வருகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. ஷாபனா, விஜே அக்னி மற்றும் பிரியா ராமன் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் 1000 எபிஷோடுகளை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
ஜீ தமிழ் டிவி சீரியல்களிலே அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள சீரியல் செம்பருத்தி தான். டிஆர்பி ரேட்டிங்கிலும் ஜீ தமிழ் சீரியல்களில் செம்பருத்தி சீரியல்தான் முன்னிலையில் உள்ளது.
செம்பருத்தி சீரியலில் கங்கா என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகை ராணி. தற்போது அவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
தற்போது ராணிக்குப் பதிலாக விஜய் டிவி நடிகை உஷா எலிசபெத் நடித்து வருகிறார். உஷா, விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ சீரியலில் நடித்தவர். உஷா மேலும் பாண்டவர் இல்லம், ப்ரியமானவளே உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஏற்கனவே, ஆதித்யாவாக நடித்த கார்த்திக் ராஜ் விலகி, விஜே அக்னி அவருக்குப் பதிலாக நடித்து வரும் நிலையில், தற்போது ராணியும் விலகியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil