scorecardresearch

என்னை அசிங்கப்படுத்திட்டீங்க… ஜீ தமிழுக்கு எதிராக செம்பருத்தி நடிகை ஆதங்கம்

என்னை எதற்காக அழைத்தீர்கள்? எனக்காக மொமெண்டம் எங்கே? என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள் இதனால் நான் சோகத்தில் இருக்கிறேன்.

என்னை அசிங்கப்படுத்திட்டீங்க… ஜீ தமிழுக்கு எதிராக செம்பருத்தி நடிகை ஆதங்கம்

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் வெற்றிவிழாவில் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக வில்லி நடிகை புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை சீரியல்கள் தற்போது இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழின் செம்பருத்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி சீரிய மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தது.

ஷபானா, விஜே அக்னி, பிரியா ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இறுதியில், வில்லி நந்தினி மற்றும் வனஜா ஆகியோர் இறந்துவிடுவது போல் காட்டப்பட்டுள்ள நிலையில், முன்னணி கேரக்டரான அகிலாண்டேஸ்வரியும் இறப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

ஒரு சில மணி நேரங்கள் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் க்ளைமேக்ஸ் எபிசோடு முடிந்தவுடன், நிகழ்ச்சியின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சீரியலில் நடித்த அனைவரும் கண்ணீர் மல்க விடைபெறுவதாக கூறியிருந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே இந்த விழாவில் தன்னை அசிங்கப்படுத்திவிட்டதாக செம்பருத்தி சீரியலில் வில்லி நந்தினியாக நடித்த நடிகை மௌனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், செம்பருத்தி சீரியலில் என்னுடைய பெஸ்டை கொடுத்தேன். ஆனால் ஜீ தமிழ் எனக்கு பெஸ்டை திரும்ப கொடுக்கவில்லை. சீரியலில் மெயின் ரோலில் நடித்த நடிகைகள் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். எனக்கு எந்த மரியாதையும் கொடுக்க தோன்றவில்லையா ஜீ தமிழ்,?

என்னை எதற்காக அழைத்தீர்கள்? எனக்காக மொமெண்டம் எங்கே? என்னை அசிங்கப்படுத்திவிட்டீர்கள் இதனால் நான் சோகத்தில் இருக்கிறேன். அதே சமயம் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு கொண்டாடுவதால் மகிழ்ச்சியல் இருக்கிறேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.

1400 எபிசோடுகளை கடந்த செம்பருத்தி சீரியலின் வெற்றி விழாவில், முக்கியமான வில்லி ரோலில் நடித்த நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்காதது குறித்து புகார் தற்போது சின்னத்திரை சீரியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Zee tamil serial actress mounika complaint against zee tamil

Best of Express