Advertisment

கிட்னி கொடுக்கும் செந்தில்... மாஸ் என்டரி கொடுத்த மீனாட்சி : ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் மற்றும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Meenakshmi Ponnunga Amutha

மீனாட்சி பொண்ணுங்க - அமுதாவும் அன்னலட்சுமியும்

அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். ஊர்காரர்கள் வந்து அன்னம் வடிவேல், மாணிக்கம் சிதம்பரத்தை அவமானப்படுத்தி அவர் உயிர் போகும் அளவுக்கு செய்ததால் இரண்டு ஊருக்கும் பிரச்சனை வந்துவிடும் என சொல்லி அவர்களை பஞ்சாயத்துக்கு அழைத்து செல்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் டாக்டர் சிதம்பரத்திற்கு கிட்னி மாற்ற வேண்டும் என சொல்கிறார், மேலும் உடனே கிடைக்க வேண்டும் என்றால் குடும்பத்தினர் தான் தர வேண்டும் என சொல்ல அனைவரும் செக் பண்ண நாகு மட்டும் நழுவி விடுவது. செந்தில் தானும் தருவதாக சொல்கிறான். மறுபக்கம் சிதம்பரத்தை தன் காலில் விழ வைத்ததுக்கு ஊர்காரர்கள் வடிவேல் மேல் கோபப்பட்டு அவனை அடிக்கிறார்கள்.

அன்னத்தை ஊர் மத்தியில் உட்கார வைக்க அன்னத்துக்கு அது அவமானமாக இருக்கிறது. டெஸ்ட் ரிசல்ட் படி செந்திலின் கிட்னி தான் பொருந்தும் என டாக்டர்கள் முடிவு சொல்ல செந்தில் கிட்னி கொடுக்க சம்மதிக்கிறான். இந்த விஷயம் அறியும் சிதம்பரம் வேண்டாம் என மறுக்க செந்தில் அவரிடம் பேசி சம்மதிக்க வைக்கிறான். செந்தில் தன் கிட்னியை சிதம்பரத்துக்கு கொடுக்க சம்மதித்து இருப்பதை நினைத்து இளங்கோ மனம் நெகிழ்ந்து கோபத்தை மறந்து செந்திலுடன் பேச, அமுதாவும் செந்தில் மேல் அதீத உணர்வுடம் நெகிழ்ச்சியாகிறாள்.

சீஃப் டாக்டர் ஒருவர் வந்து சிதம்பரம் பிழைத்து விட்டார் அவருக்கு கிட்னி மாற்றி அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை என சொல்கிறார். அதை கேட்ட அமுதா செந்திலை கண்ணீருடன் அணைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் யமுனாவின் தாலியை கழற்றி பால் சொம்பில் போட சொன்ன தீர்ப்பை சக்தி ஏற்க மறுக்கிறாள். யமுனாவும் தாலியை கழற்ற மறுக்கிறாள்.

அதேபோல் புஷ்பாவிடம் பத்திரத்தில் கையெழுத்து போட்டு மீனாட்சி பணம் வாங்கி இருப்பதால் வீடு புஷ்பாவுக்கு தான் சொந்தம் என்றும் பஞ்சாயத்துகாரர்கள் சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் சக்தி தடுமாற்றத்தில் இருக்க,  அங்கே வந்து நின்ற வெற்றியிடம் என்ன செய்வது என சக்தி கேட்கிறாள்.

இதற்கெல்லாம் பதில் நம்பர் ஒன் வந்திருக்கிறார்கள் என வெற்றி கூற, காரில் இருந்து மீனாட்சி இறங்கி வர அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள். துர்கா, யமுனா, சக்தி, சாந்தா அனைவரும் சென்று மீனாட்சியை சந்தோஷமாக வரவேற்க நான் சில காலம் ஒரு இடத்தில் இருந்தேன் அதைப்பற்றி பிறகு கூறுகிறேன் என சொல்லிவிட்டு, பஞ்சாயத்தில் வந்து துர்காவுக்கு தாலி கட்ட தயாராக இருந்த சங்கிலியை அறைகிறாள்.

பிறகு புஷ்பாவிடம் நான் கடன் வாங்கியது உண்மைதான் ஆனால் அதை திருப்பிக் கொடுத்து விடுவேன் அதற்காக சங்கிலிக்கு என் மகளை கல்யாணம் செய்து வைக்க முடியாது என்று கூறுகிறாள். மேலும் கார்த்திக்கிடமும் கோகிலாவிடமும் சென்று யமுனாவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்.

அவள் மீனாட்சி மகளாகவே இருக்கட்டும், எப்போது யமுனா நீங்க தாலி கட்டிய மனைவி என்று உணரும் தைரியம் வருகிறதோ அப்போது வந்து என்னிடம் பேசுங்கள் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment