Advertisment

குறி வைத்த கர்நாடக போலீஸ்: தாயை பறிகொடுத்த நாயகன்; குடும்பம் கரை சேருமா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Karnadaka Police Karthigai Deepam

கர்நாடக போலீசால் காத்திருந்த அதிர்ச்சி.. கீதா செய்த தில்லாங்கடி வேலை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கீதாவை சமானப்படுத்தி போலீஸ் ஸ்டேஷன் வர சம்மதிக்க வைத்த நிலையில் இன்று, போலீஸ் ஸ்டேஷனில் கர்நாடகா பொலிஸ் வந்து கீதா குறித்த விவரங்களையும் போட்டோக்களையும் கொடுத்து இவங்க நாங்க தேடிட்டு இருக்க கைதி, இவங்களை பத்தி உங்களுக்கு எதாவது தகவல் கொடுத்தால் சொல்லுங்கள் என்று பேசி கொண்டிருக்க கார்த்திக், கீதா காரில் வந்து சேருகின்றனர்.

இதை தொடர்ந்து கர்நாடகா போலீஸ் சரவணனிடம் பேசி முடித்து விட்டு வெளியே வர காரில் இருக்கும் கீதாவை பார்த்து விடுவார்களா என்ற பில்டப் எகிற கவனிக்காமல் சென்று விடுகின்றனர். அதன் பிறகு கார்த்திக் மற்றும் கீதா ஸ்டேஷனுக்குள் நுழைகின்றனர். சரவணன் சில கேள்விகளை கேட்க கீதா தலையில் அடிபட்டதால் எதுவும் நினைவில் இல்லை என்று சமாளிக்கிறாள். அதே நேரத்தில் அங்கு டேபிளில் தன்னுடைய போட்டோ இருப்பதை பார்த்த கீதா யாருக்கும் தெரியாமல் அதை எடுத்து விடுகிறாள்.

பிறகு வீட்டிற்கு வந்ததும் அந்த போட்டோவை ஒரு புக்கில் வைத்து பீரோ மீது வைக்க அதில் இருந்த போட்டோ பறந்து கீழே விழுந்து விடுகிறது. அடுத்து அபிராமி ஜோசியரை வீட்டிற்கு அழைத்து ஒரு நல்ல நாள் குறிக்க சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். கார்த்திக் அபிராமியிடம் இப்போ எதுக்கு மா இதெல்லாம் என்று பேசி தள்ளி போட முயற்சி செய்ய அபிராமி பண்ண வேண்டியதை பண்ணி விடலாம் என்று சொல்ல கார்த்திக் பதில் பேச முடியாமல் நிற்க கீதா கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூடாமணிக்கு நடந்த இறுதி சடங்கு.. கண்ணீர் கடலில் சண்முகம் குடும்பம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கத்திக்குத்து வாங்கிய சூடாமணி மரணப்படுக்கையில் இனிமேல் அரிவாள் எடுக்க கூடாது என்று சண்முகத்திடம் சத்தியம் வாங்கியதை தொடர்ந்து இன்று, சூடாமணியை சண்முகத்தின் தங்கைகளும் பரணியும் தோளில் சுமந்தபடி செல்கின்றனர். இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி நான் நினைச்சது நடந்துடுச்சு என்று சூடாமணியின் சாவை கொண்டாடுகிறான்.

இதையடுத்து சண்முகம் சூடாமணிக்கு இறுதி சடங்குகள் செய்து கொல்லி வைத்து கண் கலங்குகிறான். சூடாமணியின் பிரிவால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கி துடிக்கிறது. அதன் பிறகு வீட்டில் சண்முகம் குடும்பம் மொத்தமும் சாப்பிடாமல் கண் கலங்கியபடி இருக்க பாக்கியம் வெட்டுக்கிளி மற்றும் உடன்குடியிடம் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட வைக்கிறாள்.

சண்முகம் அம்மாவை நினைத்து கண் கலங்குகிறான். பிறகு தங்கைகள் எல்லாரும் ஒன்றாக தூங்கி கொண்டிருக்க சண்முகத்திற்கு அம்மா சூடாமணி பக்கத்தில் உட்கார்ந்து அவர்களை பார்த்து கொண்டிருப்பது போன்று தோன்ற திடீரென ரத்னா தூக்கத்தில் இருந்து எழுந்து அம்மாவை நினைத்து அழுகிறாள். சண்முகம் சோகத்தை மனதில் வைத்து கொண்டு தங்கைகளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே வந்து பேசிக்கொண்டு இருக்கிறான்.

இதுவரைக்கும் மரத்தை திட்டி மட்டுமே பேசிய சண்முகம் முதல் முறையாக அம்மாவை நினைத்து எமோஷனலாக பேசி மரத்தை கட்டியணைத்து கண் கலங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment