Advertisment

காணாமல் போன அம்மா: கல்யாணத்துக்கு ரெடி ஆன வில்லி; உண்மை எப்போது வெளி வரும்?

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
KP ans

அண்ணா - கார்த்தகை தீபம்

ரம்யாவை பார்க்க வந்த மாப்பிள்ளை.. காத்திருந்த ட்விஸ்ட் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா தீபாவிடம் இந்த கல்யாணம் நடந்தால் அபிராமி உயிருக்கு ஆபத்து என்ற உண்மையை உடைத்த நிலையில் இன்று, ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு அதிர்ச்சியான தீபா நேராக அபிராமியிடம் வந்து இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாள். அபிராமி அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை உங்க அப்பா அம்மா சொன்னதா தானே சொன்னாங்க அவங்களே கூப்பிட்டு கேட்கலாம் என்று கொல்கிறார்.  

அதன்பிறகு தர்மலிங்கம் ஜானகியை கூப்பிட்டு விசாரிக்க அவர்கள் நாங்க அப்படி எதுவும் சொல்லலையே என்று மாற்றி சொல்கின்றனர். மேலும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு தான் பேசிட்டு இருந்ததா சொல்ல, தீபா ஐஸ்வர்யாவை இனிமேல் இன்னொருமுறை இப்படி ஏதாவது பண்ணீங்க என்னை வேற மாதிரி பார்ப்பீங்க என்று எச்சரிக்க அபிராமி ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விடுகிறாள். 

அதன் பிறகு ரம்யாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகை தர உள்ள நிலையில் மீனாட்சி, தீபா மற்றும் மைதிலி ஆகியோர் ரம்யாவை தயார் செய்கின்றனர். மாப்பிள்ளை ரமேஷ் வீட்டுக்கு வர ரம்யாவை காபி கொண்டு போய் கொடுக்க சொல்ல அவள் நான் ஒரு பெரிய கம்பெனியோட முதலாளி நான் எப்படி இதெல்லாம் செய்வேன் என்று சொல்கிறாள். 

தீபா இதெல்லாம் காலம் காலமா இருந்துட்டு வர வழக்கம். அதை எல்லாம் நெனச்சதும் மாத்திட முடியாது என்று சொல்லி ரம்யாவிடம் காபியை கொடுத்து அனுப்புகிறாள். காபி கொண்டு வந்து கொடுக்க ரம்யாவின் அப்பா மாப்பிள்ளையை பிடித்திருப்பதாக சொல்ல ரம்யா தனக்கும் பிடித்திருப்பதாக சொல்ல ரமேஷ் ரம்யா சொன்னதற்கு மாறாக எனக்கும் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொல்ல ரம்யா கடுப்பாகிறாள். 

இதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் சம்மதம் என்று சொல்லி தட்டை மாற்றிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காணாமல் போன சூடாமணி, பதறிய குடும்பம்.. சண்முகம் செய்ய போவது என்ன? 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீட்டை விட்டு கிளம்ப முத்துப்பாண்டி குறுக்கே படுத்து தாண்டி போக சொல்லி தடுத்து நிறுத்திய நிலையில் இன்று, சூடாமணி சண்முகம் என் அம்மா உத்தமினு நிருபித்து காட்டுறேன் என்று சத்தியம் செய்ததை நினைத்து பீல் செய்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் சண்முகம் சூடாமணி பேசிய வார்த்தைகளை நினைத்து பீல் செய்கிறான். 

பிறகு சண்முகத்தின் அருகே வந்த பரணி ரெண்டு பேரும் சேர்ந்து அத்தை எந்த தப்பும் பண்ணல என்று நிரூபிக்கலாம் என்று சொல்கிறாள். அடுத்து நைட் ஆனதும் இசக்கி தூங்காமல் கண் கலங்கி கொண்டிருக்க  முத்துப்பாண்டி எதுக்கு டி இப்படி அழுதிட்டு இருக்க என்று கோபப்படுகிறான்.  என் அம்மாவை நினைச்சி கவலையா இருக்கு, என் அண்ணன் என் அம்மா எந்த தப்பும் பண்ணலன்னு எப்படி நிரூபிக்க போறான் என்று புலம்புகிறாள். இந்த வீட்டில அழுது அழுது தொண்டை வறண்டு போச்சு, தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்ல என்று சொல்ல முத்துபாண்டி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறான்.

தண்ணீரை குடித்த இசக்கி மீண்டும் அழ முத்துப்பாண்டி இப்போ ஏன் டி அழுகிற என்று கேட்க இதுவரைக்கும் என்கிட்ட பேசாத ஒரு மனுஷன் எனக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தா அழுகை வர தானே செய்யும் என்று சொல்கிறாள். முத்துப்பாண்டி ஒழுங்கு மரியாதையா படுத்து தூங்கு என்று சொல்கிறான்.

இதை தொடர்ந்து அடுத்த நாள் சூடாமணியும் வைகுண்டமும் துணி காய போட்டு கொண்டிருக்கும் போது சூடாமணி எனக்கு இது போதும். இனிமே நான் ஜெயில்ல செத்து போனா கூட எனக்கு கவலை இல்லை என்று சொல்ல வைகுண்டம் ஏன் இப்படியெல்லாம் பேசுற என்று பதறுகிறார். 

இவர்கள் பேசுவதை கேட்க பரணியும் ரத்னாவும் பீல் பண்ணுகின்றனர், பிறகு வைகுண்டம், பரணி மற்றும் ரத்னா என மூவரும் ப்ரெசிடெண்ட் ஆபீஸில் இருக்கும் சண்முகத்தை பார்க்க வர ரத்னா எனக்கு அம்மா வேணும் என்று சொல்லி அழ வைகுண்டம் என் பொண்டாட்டியை வெளியில் கொண்டு வந்துடு என்று கையெடுத்து கும்பிடுகிறார்.

இறுதியாக இவர்கள் வீட்டிற்கு கிளம்பி வர அங்கு சூடாமணி இல்லாமல் இருக்க அனைவரும் பதற்றம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment