Advertisment

தாய் மீது சத்தியம், சபதம் எடுத்த ஹீரோ: பழியை துடைப்பாரா? கல்யாண கலாட்டா எபிசோடுகள்!

ஜீ தமிழில் திருமணம் தொடர்பான எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் அண்ணா, நினைத்தேன் வந்தாய் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anna nv and Nk

அண்ணா - நெஞ்சத்தை கிள்ளாதே- நினைத்தேன் வந்தாய்

நின்று போன நிச்சயம்.. விபூதி அடித்து சத்தியம் செய்த சண்முகம்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியால் சண்முகத்தின் அம்மா சூடாமணி தான் என்பது அனைவர்க்கும் தெரிய வந்த நிலையில் இன்று, சூடாமணி கோவில் நகையை திருடியவள் என்று அவள் மீது பழியை போட, சண்முகமும் அவனது தங்கைகளும் எங்க அம்மா உத்தமி, அதை நான் நிரூபித்து காட்டுறேன் என்று சவால் விடுகிறான் சண்முகம்.

மேலும் சௌந்தரபாண்டி தான் குற்றவாளி என்று சொல்ல, அவர் எதுக்கு என் மேல பழி சுமத்துறீங்க என்று கேட்க, சூடாமணி நீ தான் எல்லா தப்பையும் பன்னேனு நிரூபித்து ஜெயிலுக்கு அனுப்புவோம். அப்படி நிரூபிக்க முடியலைன்னா நான் தூக்குளித்து செய்து போய்டுவேன் என்று சபதம் எடுக்கிறாள். சௌந்தரபாண்டியால் நடந்த கலவரத்தால் அவரது திட்டத்தின் படி இந்த நிச்சயம் நடக்காமல் போகிறது.

வீட்டிற்கு வந்ததும் சூடாமணி நிச்சயம் நின்றதை நினைத்து வருத்தப்பட ரத்னா என் நிச்சயமா முக்கியம், உன்னை அப்படி பேசிடங்களே என்று வருத்தப்படுகிறாள். சண்முகம் நீ உத்தமினு இந்த ஊர் முன்னாடி நிரூபித்து காட்டுவேன் என்று விபூதி தட்டில் அடித்து முருகன் மீது சத்தியம் செய்கிறான். அடுத்து வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்கிறான். ஆனால் ரத்னா அவனது மன்னிப்பை ஏற்க மறுக்கிறாள்.

நிச்சயதார்த்த மேடையில் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்திட்டு இப்போ எதுக்கு வந்த என்று ஆவேசப்படுகிறாள். வெங்கடேஷ் அவளை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். ஆனால் சமாதானம் ஆகாத ரத்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் எனவும் இந்த கல்யாணத்த பத்தி வீட்டில் யாரும் பேச கூடாது எனவும் சொல்லி விட சண்முகம் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரூம் பாயை மடக்கிப் பிடித்த சுடர்.. மாட்ட போகும் மனோகரி

நினைத்தேன் வந்தாய் சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் ரூம் பாய் மனோகரிடம் போனை கேட்டு மிரட்டிய நிலையில், மனோகரி யாருக்கும் தெரியாமல் போனை எடுத்துக் கொண்டு அவனை பார்க்க செல்ல சுடரும் ராமையாவும் பின் தொடர்ந்த நிலையில் இன்று, எல்லாத்துக்கும் காரணம் மனோகரி தான் என்பதை அறியும், சுடர் மற்றும் ராமையா அவளை பின்தொடர்ந்து செல்ல ரூம் பாயிடம் போனை கொடுக்கிறாள். அதன் பிறகு ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முழு காரணம் மனோகரி தான் என்பதை அறிகின்றனர்.

பிறகு ரூம் பாய் போனை வாங்கிக் கொண்டு செல்லும் போது சுடரும் ராமையாவும் அவனை துரத்திச் சென்று மடக்கிப் பிடிக்கின்றனர். பிறகு ஒரு இடத்தில் கட்டி வைத்து எழிலுக்கு போன் செய்து ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தவனை பிடித்து வைத்திருப்பதாகவும் உடனே கிளம்பி வரச் சொல்லி பேசுகிறாள். 

எழில் வீட்டிலிருந்து வேக வேகமாக கிளம்ப எதிரே வந்த மனோகரி எங்க போற எழில் என்று கேட்க ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமானவனை சுடர் புடிச்சிட்டா என்று சொன்னதும் மனோகரி அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே தனது அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி எப்படியாவது அந்த ரூம் பாயை தப்பிக்க வையுங்க என்று சொல்கிறாள். அதன் பிறகு மனோகரி எழிலுடன் கிளம்பி வர இன்னொரு பக்கம் அவளுடைய அப்பா ரவுடிகளுடன் காரில் கிளம்பி வருகிறார்.  அவர் மனோகரிக்கு போன் செய்ய மனோகரி எழிலுடன் இருப்பதால் பேச முடியாமல் போனை கட் செய்து கொண்டே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த கல்யாணம் நடக்காது.. வீடு தேடி வந்து அதிர்ச்சி கொடுத்த கௌதம் 

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் பார்ட்டியில் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த மாயாவை ஜீவா அறைந்த நிலையில் இன்று, ஜீவா உன்னால தான் என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்காத என்று திட்டிவிட்டு கிளம்பிச் செல்ல மாயா கடுப்பாகி நிச்சயதார்த்த மோதிரத்தை கழட்டி வீசுகிறாள்.

மறுபக்கம் ஜீவாவின் அப்பா ஜீவாவுக்காக காத்திருக்க, மதுமிதா அதான் எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னான்ல என்று கூல் செய்கிறாள். அதன் பிறகு மதுவிற்காக வாங்கிய நகைகளை எடுத்துக்காட்டி இதெல்லாம் நானும் உன் அம்மாவும் உனக்காக சேர்த்து வைத்த நகைகள் என்று பேச மது அதை பார்த்து பீல் பண்ணுகிறாள்.

அடுத்ததாக சந்தோஷுக்கு ஒரு கம்பெனியிலிருந்து சிஇஓவாக பணியாற்ற வாய்ப்பு வந்திருக்க அதை கௌதமிடம் எப்படி சொல்ல போறீங்க என்று அவனது மனைவி கேட்க கௌதமுக்கு சொல்ல வேண்டாம் என்று சொல்கிறான் சந்தோஷ். பிறகு இவர்கள் கௌதம் வீட்டிற்கு கிளம்பி வர கௌதம் நண்பர்களுடன் சேர்ந்து குடித்து கொண்டிருக்க சந்தோஷின் மனைவி சரக்கு கலந்த ஜூஸ் எடுத்து குடித்து விட்டு போதையில் உனக்கு ஏத்த பொண்ணு மதுமிதா தான் என்று திட்டுகிறாள்.

கௌதமும் ஆமாம் என்று சொல்ல வர அப்போது அங்கு வந்த மாயா ஸ்டாப் இட் என்று சொல்லி ஜீவா தன்னை அறைந்த விஷயத்தை சொல்கிறாள். அதன் பிறகு எல்லோரும் மதுமிதா வீட்டிற்கு கிளம்பி வர கௌதம் கல்யாணத்துக்கு முன்னாடியே என் தங்கச்சியை அடிப்பியா என்று ஜீவாவை திட்டி இந்த கல்யாணம் நடக்காது என அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment