மே 8-ல் முதல் சண்டக்கோழி சீரியல்.. கதை என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில் வரும் மே 8-ம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு சண்டக்கோழி என்ற புதிய சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நாயகியாக ரியா விஸ்வநாதன் நடிக்க அவருக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புகழ் நியாஸ் நடிக்கிறார்.
இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெண்கள் என்றாலே வெறுப்பு, கோபம் என வளரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த விக்ரம். மறுபக்கம் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்துக்காக கேட்டரிங் பிசினஸ் செய்து வரும் மகா.
ஜாலியான பெண்ணாகவும் அதே சமயம் தனக்கோ தனது குடும்பத்துக்கும் பிரச்சனை என்றால் சண்டைக்கோழியாகவும் இருந்து வருகிறார் மகா. விக்ரம், மகா என இருவரின் முதல் சந்திப்பும் மோதலில் தொடங்குகிறது. அதன்பிறகு இந்த மோதல் காதலாக மாறுகிறதா? இல்லையா? இவர்கள் திருமண பந்தத்தில் எப்படி இணைகிறார்கள்? அதன் பிறகு இவர்கள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பதை மையமாக கொண்டு சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக ப்ரோமோ வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சீரியலில் ஹீரோவின் அம்மாவாக கிருபா, நந்தினி என்ற கேரக்டரில் நடிக்க அப்பாவாக சேதுபதி என்பவர் குரு என்ற கேரக்டரில் நடிக்கிறார். அதோடு ஹீரோவின் தம்பியாக செம்பருத்தி சீரியல் புகழ் கதிர் விஜய் என்ற கேரக்டரில் நடிக்க நியாஸ் தங்கையாக ஸ்வேதா என்ற கேரக்டரில் நடிக்கிறார் கீர்த்தி. பி.ஏ-வாக பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராஜா.
அதே போல் ஹீரோயின் அம்மாவாக ஜோதி என்ற கேரக்டரில் தமிழ்செல்வி நடிக்க அப்பாவாக கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சிவகுமார். ஹீரோயின் அக்காவாக ஐஸ்வர்யா என்பவர் நடிக்க தங்கையாக மோகனா என்பவர் நடிக்கிறார். சீரியல் வில்லியாக அனிஷா ஐஸ்வர்யா நடிக்க அவரது அப்பா அம்மாவாக அசோக் பாண்டியன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். வில்லியின் அண்ணனாக நவீன் என்பவர் நடிக்கிறார்.
பட்டைய கிளப்பும் அண்ணா சீரியல் புதிய ப்ரோமோ வீடியோ.. கதை இதுதானா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியல் தான் அண்ணா. மிர்ச்சி செந்தில் நாயகனாக நடிக்க நந்தினி சீரியல் புகழ் நித்யா ராம் நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் செந்திலின் தங்கைகளாக சுனிதா உட்பட மேலும் 3 நடிகைகள் நடிக்க இவர்களின் அப்பாவாக நடிகர் ரோசாரி நடிக்கிறார்.
ஏற்கனவே இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பற்றி நிலையில் தற்போது சீரியலின் கதைக்களத்தை மையப்படுத்தி புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் தங்கைகளின் மீது உயிராக இருக்கும் செந்தில் அவர்கள் வெளியே செல்லும்போது ஒரு ஹிட்லராக மாறி விடுகிறார். தனது தங்கைகளின் கனவை நினைவாக்கி அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை உருவாக்கி தரவேண்டும் என்பது செந்தில் ஆசையாக இருக்கிறது.
இதனிடையே முதல் தங்கையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கும் சமயம் செந்திலின் அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். பிறகு அவருடைய மனைவி ஓடிப்போனதிலிருந்து இப்படி குடிகாரராக மாறிவிட்டார் என தெரியவர ஓடிப்போனவளோட பொண்ணா? இவளை மட்டும் ஒழுக்கமாக வளர்த்து இருப்பாங்க என இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி கிளம்பி செல்கின்றனர்.
இதனால் செந்தில் கண்கலங்கி நிற்கிறார். தனது அம்மாவால் ஏற்பட்ட அவமானங்களை கடந்து தங்கைகளை எப்படி கரைதேர்க்க போகிறார் என்பதுதான் இந்த சீரியலில் கதையாக இருக்கும் என்பது ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நிச்சயம் புதிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.