ஜீ தமிழ் டிவி சீரியல் நடிகை விஜே பார்வதி, கைதி, மாஸ்டர் பட வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் போல் கணவர் வேண்டும் என கூறியுள்ளார்.
ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் தேவயானி, திண்டுக்கல் லியோனி, அபிஷேக் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதில் தேவயானியின் மருமகளான பவித்ரா கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே பார்வதி.
விஜே பார்வதி சன் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர். இவர், சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் சன் டிவி வெளியிடும் படங்களின் இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல திரைப் பிரபலங்களை இண்டர்வீயூ செய்துள்ளார்.
தற்போது ஜீ தமிழில் புது புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார் பார்வதி. சீரியலில் உடன் நடிப்பவர்கள் அனுபவம் வாய்ந்த பெரிய நடிகர் என்பதால், தனக்கு சவாலாக இருப்பதாக கூறும் பார்வதி, அவர்கள் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் நடித்த மாஸ்டர் பட சிறப்பு நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியை விஜே பார்வதி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாஸ்டர் பட வில்லன் அர்ஜூன் தாஸ் பார்வதிக்கு செம க்யூட்டாக ப்ரொபோஸ் செய்திருப்பார். இந்த வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் செம வைரலானது. யூடியூப்பில் அந்த வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/06/137658172_254289446278906_7764451570905521900_n.jpg)
இந்த நிலையில் தற்போது அர்ஜூன் தாஸ் குறித்து பார்வதியிடம் கேட்கப்பட்டபோது, அவர் அர்ஜூன் தாஸ் மாதிரி நேர்மையா, என்னை பார்த்துக் கொள்கிற மாதிரி கணவர் வந்தால் நல்ல இருக்கும் என கூறினார்.
ஏற்கனவே, அர்ஜூன் தாஸ் பார்வதிக்கு ப்ரொபோஸ் செய்யும் வீடியோ வைரலான நிலையில், தற்போது பார்வதி அர்ஜூன் தாஸ் போல கணவன் வேண்டும் என்று கூறியிருப்பது, சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil