நிஜத் தம்பதியராக மாறும் ஜீ தமிழ் சீரியல் ஜோடி: கல்யாண தேதி அறிவிப்பு
ஜீ தமிழ் சீரியலில் சேர்ந்து நடித்த நடிகை ரேஷ்மாவும் நடிகர் மதன் பாண்டியனும் நிஜவாழ்க்கையில் தம்பதியராக உள்ளதை அறிந்த ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலில் சேர்ந்து நடித்த நடிகை ரேஷ்மாவும் நடிகர் மதன் பாண்டியனும் நிஜவாழ்க்கையில் தம்பதியராக உள்ளதை அறிந்த ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலில் ஹீரோயின் நடிகை ரேஷ்மாவும் அவருடன் நடித்த நடிகர் மதன் பாண்டியனும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு நிஜ வாழ்க்கையில் தம்பதியர் ஆக உள்ளோம் என்பதைத் தெரிவித்து திருமண தேதியை அறிவித்துள்ளனர்.
Advertisment
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் நடிகை ரேஷ்மா முரளிதரன் பிரபலமானார். இந்த சீரியலில் ரேஷ்மாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மதன் பாண்டியனும் காதலித்து வந்தனர். இருவரும் தாங்கள் காதலிப்பதாக சமூக ஊடகங்களிலும் தெரிவித்தனர்.
இதனால், நடிகை ரேஷ்மாவுக்கும் மதன் பண்டியனுக்கும் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், ரேஷ்மா - மதன் பாண்டியன் இருவரும் தங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். ரேஷ்மாவும் மதன் பாண்டியனும் திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இவரகளுடைய திருமணம் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். தங்களுடைய காதலுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளனர்.
Advertisment
Advertisements
பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோயின் ரேஷ்மாவுக்கும் அதே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மதன் பாண்டியனுக்கும் நவம்பர் 15ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜீ தமிழ் சீரியலில் சேர்ந்து நடித்த நடிகை ரேஷ்மாவும் நடிகர் மதன் பாண்டியனும் நிஜவாழ்க்கையில் தம்பதியராக உள்ளதை அறிந்த ரசிகர்கள் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”