Advertisment

கடத்தப்பட்ட மணப்பெண்: விபத்தில் சிக்கிய காதலி; காதலன் யாரை காப்பாற்றுவார்?

ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zees Nkah

கடத்தப்படும் தீபா.. காதலை சொன்ன கார்த்திக் காப்பாற்ற போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஐ லவ் யூ என்று சொல்ல தீபா ஆனந்த கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட நிலையில் இன்று, தீபா கார்த்திக்கிடம் இன்னொரு முறை ஐ லவ் யூ என்று சொல்ல சொல்லி கேட்க கார்த்திக் அதெல்லாம் ஒருமுறை தான் சொல்ல முடியும் என்று சொல்கிறான். மேலும் நமக்குள்ள இந்த வாங்க போங்க.. சார் எல்லாம் வேண்டாம். அதையெல்லாம் மாற்றனும் என்று சொல்ல தீபாவும் சரி என்று சொல்கிறாள்.

அடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஒரு போன் கால் வர அவளும் போனை எடுக்க ரியா நான் போலீசில் இருந்து தப்பி விட்டேன், நீ தான் எனக்கு உதவி செய்யணும் என்று சொல்ல ஐஸ்வர்யா நானே இந்த வீட்டுக்குள்ள இப்போ தான் நுழைந்து இருக்கேன் என்று மறுக்கிறாள். ரியா அவளை மிரட்ட ஐஸ்வர்யா வேறு வழியின்றி ஓகே சொல்ல ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் கூட்டு சேருகின்றனர்.

பிறகு தீபாவை கடத்த திட்டமிடுகின்றனர். ஐஸ்வர்யா தீபாவுக்கு தெரியாமல் மயக்க மருந்தை கொடுக்க தீபாவும் அதை குடித்து மயங்கி விழுகிறாள். இதையடுத்து ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் சேர்ந்து தீபாவை மண்டபத்தில் இருந்து கடத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரை இடித்து தள்ளிய இந்து.. மனோகரி உயிரை எடுக்க என்ட்ரி கொடுத்த புது வில்லன் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தாலே இனிக்கும் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் மற்றும் எழில் கோவிலில் சாமி கும்பிட்டு விட அய்யர் புருஷன் பொண்டாட்டி என நினைத்து ஆசிர்வாதம் செய்த நிலையில் இன்று, சுடர் மற்றும் எழில் இருவரும் சாமி கும்பிட்டு முடித்த பிறகு வெளியே வருகின்றனர், மறுபக்கம் இந்து சுடர் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துவதற்காக தீபாவுடன் காரில் வந்து கொண்டிருக்கிறாள்.

எழிலும் சுடரும் காரில் ஏற நடந்து செல்ல இந்து சுடரை இடித்து விட அவள் கீழே விழுகிறாள். பிறகு இந்து தீபாவை திட்டி அவளை அழைத்து சென்று விட எழில் சுடரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கிறான். சுடருக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயம் தெரிய வந்து அவளது அப்பாவும் ஹாஸ்பிடல் வந்து வருத்தப்பட எழில் சீக்கிரம் சரியாகிடும் என்று சொல்கிறான்.

இன்னொரு பக்கம் மனோகரியை கொல்வதற்காக புதிய வில்லன் ஒருவன் அவளை தேடி வருகிறான். பிறகு எழில் மனோகரி மற்றும் குழந்தைகளுடன் ஒரு துணி கடைக்கு வந்து இறக்கி விட்டு உள்ளே போக சொல்ல மனோகரி அந்த ரவுடியை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment