Advertisment

இந்த பக்கம் பொண்ணு... அங்கு மாப்பிள்ளை; திருமணத்தில் குழப்பம் தீருமா?

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் மற்றும் வீரா சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial Anna Ksdh

ரியா கொடுத்த ஐடியா.. தீபாவாக மாறும் ரம்யா, மணமேடையில் நடக்கப்போவது என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபாவுக்கு எதிராக ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் தன்னுடன் கூட்டு சேர்த்த நிலையில் இன்று, அபிராமி வீட்டில் கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க அபிராமி ரம்யாவிடம் நீயும் எனக்கு பொண்ணு மாதிரிதான் என்னை காப்பாத்துறதுக்காக உன் உயிரையே பணையம் வச்சிருக்க என்று பெருமையாக பேசுகிறாள்.

அடுத்ததாக தீபாவை உட்கார வைத்து கல்யாண சடங்குகள் நடக்கின்றன. இவை அனைத்தும் முடிந்த பிறகு ரம்யா ரியா வீட்டுக்கு வர அங்கு ஒருவர் உட்கார்ந்து இருக்க யாரென்று கேட்க இவர் ஒரு பெரிய மேக்கப் ஆர்டிஸ்ட் என்று அறிமுகம் செய்கிறாள். இவர் கையில ஒரு வித்தை இருக்கு என்று சொல்லி ரூமுக்கு சென்று ஒரு மாஸ்க்கை அணிந்து நடந்து வர அப்படியே தீபா வருவது போலவே இருக்கிறது.

உடல் தோற்றம் ரியாவாக இருந்தாலும் முகத்தோற்றம் அச்சு அசலாக அப்படியே தீபா போலவே இருக்கிறது. கார்த்திக் உன் கழுத்துல தாலி கட்டுறதுக்கு இதுதான் இப்போதைக்கு ஒரே வழி என்று சொல்ல கார்த்திக்கை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல என ரம்யா சொன்னாலும் கார்த்திக் தனது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்பதால் இதற்கு சம்மதிக்கிறாள்.தீபா போன்ற மாஸ்க் அணிந்து கொண்டு கார்த்திக்குடன் மணமேடை ஏற முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீராவை உன்னால் தொட முடியாது.. மாறனுக்கு வில்லியான சூர்யா, கல்யாணத்தில் நடக்க போவது என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் மாறன் வீராவிடம் நடந்து கொள்வதை பார்த்து சூர்யாவுக்கு சந்தேகம் வந்த நிலையில் இன்று, வீராவும் மாப்பிள்ளையும் சேர்ந்து கங்கா பூஜை செய்யும் போது மாறன் துணை மாப்பிள்ளையாக வந்து உட்காருகிறான், வீரா பொறுமையாக ஆரத்தி காட்டும் போது மாறன் அவளது கையை பிடித்து வேகமாக ஆரத்தி காட்டுங்க என்று சொல்கிறான். இதை பார்த்து கண்மணி, சூர்யா என எல்லாரும் கடுப்பாக வள்ளி ரசிக்கிறாள்.

அதனை தொடர்ந்து சூர்யா மாறனின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு மாறனின் போனை எடுத்து பார்க்க அதில் வீராவுடன் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை பார்த்து ஷாக் ஆகிறாள். மறுபக்கம் வள்ளி மாறனிடம் வீராவிடம் பேசிய விஷயத்தை சொல்ல மாறன் இந்த விஷயத்தில் நீ தலையிடாத அத்தை என்று கோபப்படுகிறான்.

வீரா கழுத்தில் நான் தான் தாலி கட்டுவேன் என்று உறுதியாக சொல்கிறான். அதன் பிறகு சூர்யா வீராவை கூப்பிட்டு இது குறித்து விசாரிக்க மாறன் ஆமாம் நான் வீராவை காதலிக்கிறேன், நான் தான் அவ கழுத்தில் தாலி கட்டுவேன் என்று சொல்ல சூர்யா ஷாக்காகி என்னை தாண்டி வீராவை உன்னால் தொட முடியாது என்று சவால் விடுகிறாள்.

அடுத்து ராகவனுக்கு மாறன் நடவடிக்கையில் சந்தேகம் வந்த நிலையில் அவனை கூப்பிட்டு விசாரிக்க ராகவனிடம் மாறன் வீராவை காதலிக்கும் விஷயத்தை சொல்லி ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment