வைர நெக்லஸை ஏலத்தில் எடுக்க விடமாட்டேன் என்று மேத்தாவிடம் ஆதி கூறுகிறார். இதனால ஏலத்தில் இருவரும் மாறி மாறி கேட்டு வரும்போது ஒரு கட்டத்தில் ஆதி 10 கோடிக்கு கேட்க, சற்று யோசிக்கும் மேத்தா 12 கோடிக்கு ஏலம் கேட்கிறார். அதன்பிறகு யாரும் கேட்காததால், ஏலம் முடிந்து மேத்தாவே இந்த வைர நெக்லஸை ஏலம் எடுத்த்தாக அறிவிக்கப்பட்டுகிறது. அதன் பின் கையெழுத்து போட்டுவிட்டு அந்த வைர நகையை மேத்தாவின் மேனேஜர் வாங்கி சூட்கேசில் வைத்துக்கொள்கிறார்.
அதன்பிறகு ஆதியிடம் பேசும் மேத்தா என்னால் எடுக்க முடியாது என சொன்னாய், ஆனால் இப்போ பார்த்தியா என ஏளனமாக பேசிவிட்டு, நான் 10 கோடியில் முடித்துவிடலாம் என்று வந்தேன், ஆனால் உன்னால் 2 கோடி எனக்கு நஷ்டம் என கூறுகிறார். இதனையடுத்து மேனேஜரிடம் இருக்கும் பெட்டியில் வைர நெக்லஸை சரி பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் மேத்தா. ஹோட்டலின் வாயிலில் லக்கேஜ் செக் செய்யும் இடத்தில் அந்த சூட்கேஸை வைக்க சொல்கிறார் ஹோட்டல் ஊழியர். அதை எடுத்துக்கொண்டு வெளியில் செல்கிறார் மேத்தா.
அப்போது அங்கு போலீஸ், மீடியா என கூட்டமாக நிற்க, அரசியல்வாதிகளுக்கு பினாமியாக இருந்தது, ஆதிக்கடவூர் டிரஸ்ட் பெயரில் போலி டிரஸ்ட் தொடங்கி 10 கோடி ஏமாற்றியது என புகார் வந்திருப்பதால், மேத்தாவை கைது செய்வதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார். ஆனால் மேத்தா தான் இங்கு நகை ஏலம் எடுத்துவிட்டு வருவதாக மேத்தா கூற, அந்த பெட்டியை போலீஸ் வாங்கி பார்க்கிறது.
அதில் நகைக்கு பதில் சில டாக்குமென்டுகள் மற்றும் பாத்திரங்கள் தான் இருக்கிறது. மேத்தா செய்யும் மோசடிக்கு இதுதான் ஆதாரம் என சொல்லி அவரை கைது செய்கிறது போலீஸ். லக்கேஜ் செக் செய்யும் மெஷின் உள்ளே பெட்டியை வைக்கும்போது ஹோட்டல் ஊழியர் பெட்டியை மாற்றி வைத்துவிடுகிறார். என ஆதி சொல்கிறார். இதனால் வைரமும் மீண்டும் ஆதி கைக்கு வந்து சேர்கிறது. பணமும் கிடைத்துவிட்டது. இதன் மூலமாக இந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
மேத்தாவிடம் வாங்கிய எக்ஸ்ட்ரா 2 கோடியை என்ன செய்யலாம் என சொல்லுங்கள் என ஆதி கேட்க அதை ஊனமுற்ற குழந்தைகளுக்காகவே செலவு செய்துவிடலாம் என பார்வதி கூற அப்படியே செய்து விடலாம் என அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். அத்துடன் முடிகிறதுஇன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil