Advertisment

சின்னத் திரை நடிகை திருமணம்; முத்தமிடும் புகைப்படம் வைரல்

ஜீ தமிழ் கனா தொடர் சின்னத் திரை நடிகை தர்ஷனா திருமணம உறவினர்கள் மத்தியில் எளிமையாக நடந்தது. அவர் தனது நீண்ட கால காதலன் அசோகன் என்பவரை கரம் பிடித்தார்.

author-image
WebDesk
New Update
Zee Tamil small screen actress Darshana got married

ஜீ தமிழ் சின்னத் திரை நடிகை தர்ஷனா திருமணம் நடந்தது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் கனா என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை தர்ஷனா என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவந்தார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவற்பை பெற்றுள்ள இந்தத் தொடரில் இருந்து நடிகை தர்ஷனா அண்மையில் விலகினார். தற்போது தர்ஷனாவுக்கு பதிலாக துணிஷா என்ற புதுமுக நடிகை நடித்துவருகிறார்.

நடிகை தர்ஷனா திருமணத்துக்காகதான் தொடரில் இருந்து விலகினார் என்று அப்போது பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகை தர்ஷனா தனது நீண்டகால காதலர் அசோகன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்தத் திருமணம் உறவினர்கள் மத்தியில் மிக எளிமையாக நடந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இருவரும் முத்தமிட்டு கொண்ட புகைப்படங்களும் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment