New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Anna-Serial.jpg)
அண்ணா சீரியல்
ப்ரோமோ வீடியோவில் செந்தில் உடல் முழுவதும் வேல் குத்தி ஆக்ரோஷமாக சாமியாடியது ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
அண்ணா சீரியல்
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில். அதன் பிறகு இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 மற்றும் 2- ஆகிய சீரியல்களில் நடித்தார்.
இதில் கொரோனா காலகட்டத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 முடிவடைந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியலின் சீசன் 2-ம் முடிவுக்கு வந்தது. இதனிடையே மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள அண்ணா சீரியலில் சண்முகம் என்ற கேரக்டரில் நடிக்க உள்ளார்.
இந்த சீரியல் குறித்த ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிப்பதற்காக மிர்ச்சி செந்தில் விரதம் இருந்த நிகழ்வுகள் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா சீரியலின் முதல் ப்ரோமோ வீடியோவில் செந்தில் உடல் முழுவதும் வேல் குத்தி ஆக்ரோஷமாக சாமியாடியது ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த ப்ரோமோ காட்சியில் நடிப்பதற்காக செந்தில் 1 வாரம் விரதம் இருந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இந்த சீரியலுக்கான போட்டோஷூட் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டோ ஷூட்டுக்காவும் அவர் மூன்று நாட்கள் விரதம் இருந்துள்ளார். அவர் நிஜ வாழ்க்கையை போல இந்த சீரியலிலும் முருக பக்தர் என்பதால் விரதம் இருந்து சீரியலுக்கான வேலைகளை தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
அண்ணா சீரியலில் மிர்ச்சி செந்தில் 4 தங்கைகளுக்கு அண்ணாக நடித்து வருகிறார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.