ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ சர்வைவர். இந்த நிகழ்ச்சியை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக விக்ராந்த், சிருஷ்டி டாங்கே, விஜே பார்வதி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, பெசன்ட் ரவி உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். 100 நாட்கள் காடு, மலைகளில் பல சவால்களை எதிர்கொண்டு எந்த அளவிற்குத் துணிச்சலோடு வாழ்கிறார்கள் என்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.
Advertisment
போட்டியாளர்கள் காடர்கள் அணி, வேடர்கள் அணி என இருப் பிரிவாக பங்கேற்று வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் இரு அணிகளுக்கும் உணவா? நெருப்பா? என்பதில் தான் போட்டி இருந்தது. போட்டி ஒரு பக்கம் கடினமாகி கொண்டிருப்பதால், போட்டியாளர்களுக்கு நெருக்கடி அதிகமாகி வருகிறது. இதில் விஜே பார்வதி நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கி வருகிறார். அம்ஜத் கானுடன் மரம் வெட்ட சென்ற இடத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்தாகட்டும், சிருஷ்டியிடம் கேரமா வரும்போது மட்டும் வேலை செய்யுற மாதிரி நடிக்கிறியா என வம்பிழுப்பதாகட்டும், பார்வதி வேற லெவலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கும் புதிய ப்ரோமோ பார்வதியின் அடுத்த அத்தியாயத்தை காட்டுகிறது. அந்த ப்ரோமோவில், விஜே பார்வதி, கடற்கரையிலிருந்து ஓடி வரும்போது கீழே விழுந்து விடுகிறார். அதைப் பார்த்து சிருஷ்டி சிரித்துவிட கோபப்படும் விஜே பார்வதி, என் முதுகுக்கு பின்னால் சிரிக்காதீங்க, என்னை மட்டம் தட்ட பார்க்காதீங்க என்று சொல்கிறார். அதற்கு சிருஷ்டி நான் சும்மா ப்ரண்ட்லியா தான் சிரிச்சேன் என சொல்ல, அதை ஏற்காத பார்வதி நான் கீழே விழுவது உங்களுக்கு சிரிப்பா இருக்கா என சிருஷ்டியிடம் சண்டையிடுகிறார்.
இந்த ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் பார்வதி சும்மா இருந்தாலும், அவர் வாய் சும்மா இருக்காது, அவருக்கு விஜய் டிவின்னு நினைப்பு, ஓவரா பந்தா பண்ணுகிறார் என்று கூறி வருகின்றனர். ஒரு ரசிகரோ பார்வதியால் வேடர்கள் அணியின் மரியாதை போச்சு என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil