Advertisment

விவாதத்தில் நடந்த வாக்குவாதம்: நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிரபலம்; காதல் பட நடிகை ட்விஸ்ட்!

ஜாகத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கையை கணிக்கலாம் என்று சொன்னாலும், பலருக்கும் இது நடக்கிறதா அல்லது பொய்யான தகவலா என்ற சந்தேகம் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Bablu Santhiya

ஜாதகத்தை நம்புபவர்கள் மற்றும் அதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பங்கேற்ற ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகை காதல் சந்தியா, நடிகை பப்லு ப்ரித்விராஜ் பற்றி கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லை என்றாலும், கண்டிப்பாக அவரது பெயரில் ஒரு ஜாதகம் இருக்கும். அல்லது இதற்கு முன்பு இருந்திருக்கும். இந்த ஜாதகத்தை ஜோதிடரிடம் சென்று பார்க்கும்போது அவர் சொல்லும் பலன்கள் பலிக்கிறதா இல்லையா என்பதை கடந்து, தனக்கு ஜாதகம் இருந்தும் அதை ஒருவர் நம்புகிறாரா? அல்லது நம்பவில்லையா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

ஜாகத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கையை கணிக்கலாம் என்று சொன்னாலும், பலருக்கும் இது நடக்கிறதா அல்லது பொய்யான தகவலா என்ற சந்தேகம் இருக்கும். இதன் அடிப்படையில் ஜாதகத்தை நம்புபவர்கள் மற்றும் அதன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் எதிர் எதிராக இருந்து வாதாடும் நிகழ்ச்சி நாளை (செப்டம்பர் 08) ஜீ தமிழின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுடன், திரை பிரபலங்களான காதல் சந்தியா, நடிகரும் இயக்குனருமான அனுமோகன் ஆகியோர் ஜாதகத்தை நம்பும் பிரிவிலும், நடிகர் பப்லு ப்ரித்விராஜ் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை என்ற பிரிவிலும் இருந்து பேசுகின்றனர். இதில் முதலில் பேசும் பப்லு, என் மகன் பிறந்தபோது, குடும்பத்தில் உள்ளவர்கள் அவன் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டும்போது அவன் பெரிய ஆளாக வருவான், ப்ரபோசர், விஞ்ஞானி ஆவான் என்று சொன்னார்கள்.

நானும் நமது மகன் பெரிய ஆளாக வருவான் என்று நினைத்தேன். ஆனால் 4 வயதில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சரியாக பேசவும் முடியாமல் இருக்கிறான். அதனால் ஜாதகம் சுத்த பொய் என்று சொல்ல, அதற்கு காதல் சந்தியா, எனக்கு 2016க்கு அப்புறம் படவாய்ப்பு இல்லை. அப்போது எனது நண்பருக்கு தெரிந்த ஒரு ஜோதிடர், நீங்கள் திருத்தனி சென்று தரிசனம் செய்தால் சரியாகிவிடம் என்று சொன்னார். அதன்படி நான் திருத்தனி சென்றேன்.

இப்போது ஒரு பெரிய ஸ்டூடியோ வைத்து நல்ல நிலையில் இருக்கிறேன் என்று சொல்ல, இது திருத்தனி போனதால் நிகழ்ந்தது அல்ல, உங்கள் உழைப்பால் வந்தது என்று பப்லு ப்ரித்விராஜ் சொல்ல, இடையில் குறுக்கிடும் அனு மோகன், நீங்கள் இப்போது இங்கு இருக்கவே உங்கள் ஜாதகம் தான் காரணம் என்று சொல்ல, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுகிறது. இதன் பிறகு அனு மோகன் கோபத்தில் அரங்கில் இருந்து வெளியேறிவிடுகிறார்.

முன்னதாக, இவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். அப்படி என்றால் அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படி பார்த்திருந்தால், இந்த நிலை அவருக்கு வந்திருக்காது என்று காதல் சந்தியா பேசியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment