ஜீ தமிழின் தவமாய் தவமிருந்து சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தவமாய் தவமிருந்து. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் இதுவரை 480 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த சீரியலில் பசங்க சிவகுமார் மற்றும் அனிதா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் சந்தியா ராமச்சந்திரன், பிரிட்டோ மனோ, மகேஷ் ஜி, தீனு நிரோஷினி, பாண்டி கமல், யாளினி ராஜன், கருணா விலாசினி, பாலா கௌம்ஹர், சங்கீதா பாலன், பிரியா, சுனிதா, சாய் சக்தி, கானா ஹரி, மரியா ஜூலியானா, புவியரசு ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரேவதி, ராஜா, ரவி மற்றும் மலர் ஆகிய நான்கு குழந்தைகளைக் கொண்ட மார்க்கண்டேயன் (பசங்க சிவகுமார்) மற்றும் சீதா (அனிதா நாயர்) பற்றிய கதை.
பிள்ளைகள் 4 பேரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர், இது அவர்களின் பெற்றோரை அவமானப்படுத்தி வீட்டை இரண்டாக பிரிப்பதும், தங்கள் குழந்தைகளின் அடாவடித்தனமான அணுகுமுறையால் ஏமாற்றமடைந்த வயதான தம்பதிகள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் கொலை பழி ஏற்றுக்கொண்டு சிறை செல்லும் மார்கண்டேயன் வெளியில் வரும்போது பிள்ளைகள் அவரை வெறுக்கிறார்கள்.
அதன்பிறகு தனது பேர பிள்ளைகளை வைத்தே மார்கண்டேயன் தனது பிள்ளைகளுக்கு பாடம் புகட்டுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிள்ளை திருந்தி அப்பாவை ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் ஒரு வழக்கில் சிறை சென்றுவிட்டதால் அவர்களை காப்பாற்ற அப்பா மார்கண்டேயன் முயற்சி செய்கிறார். இதனால் சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
இதனிடையே வரும் அக்டோபர் 8-ந் தேதி தவமாய் தவமிருந்து சீரியல் சிறப்பு க்ளைமாக்ஸுடன் தனது பயணத்தை முடிக்கவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சந்தியா ராமச்சந்திரன், பிரிட்டோ மனோ, மகேஷ் ஜி, தீனு நிரோஷினி, ஆகிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து சீரியல் ஒளிபரப்பப்பட்டது. அக்டோபர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) எபிசோடுடன் ஒரு சிறப்பு க்ளைமாக்ஸை நடத்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“