தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் பலம் சீரியல்கள்தான் என்று உணர்ந்த ஜீ தமிழ் டிவி ரசிகர்களை ஈர்க்க இந்த வாரம் 4 சீரியல்களிலும் திருமண காட்சிகளை அமைத்து கல்யாண வாரமாக ஒளிபரப்ப உள்ளதாக அதிரடி புரோமோ வெளியிட்டுள்ளது.
Advertisment
மற்றெந்த பிராந்திய மொழிகளைவிட தமிழ் மொழியில் அதிகமான பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளும் செய்தித் தொலைக்காட்சிகளும் வந்துள்ளன. அதிலும் பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் ஆரம்பம் முதலே சீரியல்களில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என பலரும் சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனர். அதனால், பிரபல டிவி சேனல்கள் எல்லாம் சீரியல்களை ரசிகர்களைக் கவரும்படி ஒளிபரப்பி டி.ஆர்.பி-யில் முன்னிலை பெற போட்டிபோட்டு வருகின்றனர். அதற்காக, ஒரு சினிமா காட்சிகளைப் போல அதிக பொருட்செலவில் சீரியல்களின் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை கவரும் விதமாகவும் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட அனுபவத்தைக் கொடுக்க இந்த மாதம் 4 சீரியல்களிலும் ஹீரோ ஹீரோயின்களுக்கு திருமணத்தை நடத்தி ஒரு மெகா திருமண வைபவத்தை நடத்துவதாக புரொமோ வெளியிட்டுள்ளது.
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் பொம்மிக்கும் சித்தார்த்துக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதே போல, கோகுலத்தில் சீதை சீரியலில் வசுந்தராவுக்கும் அர்ஜுனுக்கும் எப்போது திருமணம் நடக்கும் நீதானே என் பொன் வசந்தம் சீரியலில் சூர்யாவுக்கும் அனுவுக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்விதமாக சீரியல்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று விறுவிறுப்பை கூட்டுவதற்காக இந்த சீரியல்களில் ஹீரோ ஹீரோயின்களுக்கு திருமணம் நடப்பதாக காட்சிகளை அமைத்துள்ளது. இதில் யாரும் எதிர்பாராதவிதமாக லக்ஷ்மி அம்மாவாக நடிக்கும் தேவையாணிக்கும் சந்தோஷாக நடிக்கும் நியாஸ்க்கும் திருமணம் நடைபெறுகிறது.
Advertisment
Advertisements
ஜீ தமிழ் டிவி தற்போது ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும், கோகுலத்தில் சீதை, நீதானே என் பொன் வசந்தம், புதுப்புது அர்த்தங்கள் சீரியல்களில் இந்த மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஒரு சீரியல் ஜோடிகளின் திருமணத்தை நடத்தி மெகா திருமண வைபவம் நடக்கிறது என்று புரொமோ வெளியிட்டுள்ளது.
இதில் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் திருமணம் இன்று (அக்டோபர் 03) ஒளிபரப்பாகிறது. அதே போல, மற்ற சீரியல்களின் திருமணங்களும் சிறப்பு எபிசோடாக ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் டிவியில் 4 சீரியல்களின் மெகா திருமண வைபவம் கல்யாண வாரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"