ஒரே நேரத்தில் டான்ஸ் ஆடுறாங்க... ஒர்க் அவுட் பண்றாங்க... சீரியல் நடிகையின் ஜாலி வீடியோ

விஜய் டிவியில் தொடங்கி ஜீ தமிழில் வளர்ந்து நிற்கும் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு ஜாலி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி...

விஜய் டிவியில் தொடங்கி ஜீ தமிழில் வளர்ந்து நிற்கும் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு ஜாலி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இதையடுத்து, அவர் ஜீ தமிழ் டிவியில் ரெட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளதால், நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும் ஜாலியான வேடிக்கை வீடியோக்களையும் சேலஞ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

My kind of Workout ❤️????

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on


அந்த வரிசையில், ஜீ தமிழ் டிவியின் ரெட்டை ரோஜா சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், ஒரே நேரத்தில், டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க் அவுட் செய்கிற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுதான் என்னுடைய ஒர்க் அவுட் ஸ்டைல் என்று கூறும் ஷிவானியின் வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள் ஒரே நேரத்தில் டான்ஸ் ஆடுறாங்கா ஒர்க் அவுட்டு பண்றாக ஜாலியாதான் இருக்கு என்று கூறிவருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகிவருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close