ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் ஹீரோ கார்த்திக் ட்ரோல் மீம்ஸ்களால் விரக்தி அடைந்து, ‘நான் எல்லாம் பிறந்திருக்கவே கூடாது” என்று கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்திக் ராஜ் தனது முதல் சீரியலிலேயே பிரபலமாகிவிட்டார். இதையடுத்து, ஆஃபிஸ் சீரியலில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது.
இதையடுத்து, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. செம்பருத்தி சீரியல் டிஆர்பில்யில் டாப்பில் இருந்து வந்தது. அந்த சீரியலில் கார்த்திக் – ஷபானா காதல் கதைக்காகவே ரசிகர்கள் தவறாமல் பார்த்தனர்.
ஒரு கட்டத்தில், செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி விலகிய பிறகு, புது நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்தாலும், மீண்டும் அந்த சீரியல் டிஆர்பி-யில் மேலே வர முடியவில்லை. அதற்கு காரணம், கார்த்திக் ரசிகர்களின் குறிப்பாக ரசிகைகளின் மனங்களைக் கவர்ந்திருந்தார்.
சீரியலில் இருந்து விலகிய கார்த்திக் சொந்தமாக சினிமா எடுத்தார். அதற்கு ரசிகர்களிடம் இருந்து உதவியும் கேட்டார். அந்த படம் வெற்றி பெறாததால், ஜீ தமிழ் டிவியில் கார்த்திகை தீபம் சீரியலில் வாய்ப்பு வரவே மிண்டும் சிரியலுக்கு வந்தார். கார்த்திகை தீபம் சீரியலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே, சில ஹேட்டர்கள் சமூக ஊடகங்களில் கார்த்திக் குறித்து மீம்ஸ்களை வெளியிட்டு ட்ரோல் செய்தனர். கார்த்திக்கிற்கு நடிக்கத் தெரியவில்லை, ஒரு எக்ஸ்பிரஷனும் கொடுக்க தெரியவில்லை என்று ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் நீங்க லைஃப்ல பண்ணுன பெரிய தப்பு என்றால் என்ன சொல்வீங்க? என்ற கேள்விக்கு, அதற்கு பதில் கூறிய கார்த்திக், “நான் பிறந்திருக்கவே கூடாது. நான் பிறந்த காரணத்தினால் தானே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கு, பிறக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை தானே! யாரும் நம்ம கிட்ட எதுவும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க, நாம பண்ணுற எதையும் தப்பு என்று சொல்லி இருக்கவும் மாட்டாங்க” என்று விரக்தியாகப் பேசி இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”