New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/12/vijay-fans.jpg)
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் கதாநாயகி பாத்திரம் விஜய் ரசிகையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி விஜய் படத்தின் வசனங்களைப் பேசி அசத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஹிரோவாக திகழும் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபலமான ஜீ தமிழ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் கதாநாயகி விஜய் ரசிகையாக நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான விஜயின் பிகில் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைக் குவித்தது. இதையடுத்து, விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் ரிலீசுக்காக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 65வது திரைப்படம் தளபதி 65 அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
#Master Thalapathy Reference ???????????? pic.twitter.com/CyM2hAQ0fn
— Prakashvijay™ (@PrakashVijay_Of) December 17, 2020
இந்த நிலையில், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் கதாநாயகி பாத்திரம் விஜய் ரசிகையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகி விஜய் படத்தின் வசனங்களைப் பேசி அசத்தும் வீடியோவை தொலைகாட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொலைகாட்சி தொடர் கதாநாயகி விஜய் ரசிகையாக நடித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் பலர் அந்த வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.