zee tamil tv: ஜீ தமிழ் டிவியின் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை வடிவுக்கரசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 1998ம் ஆண்டு வெளியான சிவப்பு ரோஜாக்கள் படம், வடிவுக்கரசிக்கும் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. வடிவுக்கரசி தியேட்டரில் சென்று சினிமா பார்க்காத குடும்பத்தில் ராணிப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர்.
இவரின் பெரியப்பா சினிமா தயாரிப்பாளராக சென்னையில் இருந்தபோது, வடிவுக்கரசியின் குடும்பம் பள்ளி விடுமுறைக்கு சென்னைக்கு வந்தார்களாம். அப்போது, சினிமா பார்க்கக் வேண்டும் என்று குடும்பம் ஆசைப்பட, பெரியப்பா ஒரு சினிமா தியேட்டரையே வாங்கினார் என்று கூட வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறி இருக்கார்.
’என்னோட பேர், புகழ், வசதிக்குக் காரணம் கே.பி. சார் தான்’ ரஜினி புகழாரம்!
காலப்போக்கில் வடிவுக்கரசி சினிமாவில் நடிக்க வந்தார். 40 ஆண்டுகாலம் சினிமாவில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ஓஹோ என்று புகழின் உச்சிக்கு சென்று, இப்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறாரா. ஜீ தமிழ் டிவியின் நாச்சியார் புரம் சீரியலிலும் நடித்து வருகிறார். இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது ஜீ தமிழ் டிவி. இவருக்கு விருது வழங்கியவர் தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்.
வடிவுக்கரசி பேசுகையில், கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலையில் இருந்த எனக்கும் நடிக்க வரும் என்று கண்டுபிடித்து, என்னை நடிக்க வைத்தவர் எங்கள் இயக்குநர் பாரதிராஜா. இந்த நேரத்தில் அவருக்கு நன்றி என்று கூறினார். மெட்டி படத்தில் அருமையான நடிப்பு, முதல் மரியாதை படத்தில் பயம் தரும் நடிப்பு, அருணாச்சலம் படத்தில் மிரட்டும் நடிப்பு என்று அசத்தி இருப்பார் வடிவுக்கரசி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil