Advertisment

இந்த பிரம்மாண்ட சீரியல் முடிகிறதா? ரசிகர்கள் ஷாக்

இந்த புகைப்படங்களைப் பற்றி யாரடி நீ மோகினி வில்லி சைத்ரா குறிப்பிடுகையில், “இந்த முகங்களை நான் மிகவும் மிஸ் பண்ணப்போகிறேன். சிலர் மிஸ் ஆனாலும், யாரடி நீ மோகினியில் கடைசி சில நாட்கள்” என்று குறிப்பிட்ட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Zee Tamil TV, Yaaradi Nee Mohini serial, Yaaradi Nee Mohini serial going to end, actress Chaitra puja photos, ஜீ தமிழ் டிவி, யாரடி நீ மோகினி, யாரடி நீ மோகினி சீரியல் முடிவு, ஸ்வேதா, வெண்ணிலா, முத்தரசன், யாரடி நீ மோகினி 2வது பாகம், swetha, mutharasan, vennila, zee tamil tv serials, tamil tv serial news, Yaaradi Nee Mohini serial updates

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட சீரியலான யாரடி நீ மோகினி சீரியல் திடீரென முடிக்கப்படுவதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சிய்ல் 2017ம் ஆண்டு முதல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட் என ஏகப்பட்ட ட்விஸ்ட்களுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்து வெற்றிநடை போட்டு வந்தது யாரடி நீ மோகினி சீரியல். இந்த சீரியல் தற்போது மிக விறுவிறுப்பாக பரப்பரப்பான கட்டத்தில் சென்றுகொண்டிருக்கிற நேரத்தில் இந்த சீரியலை முடித்துவிட்டு இதே சீரியலின் இரண்டாவது பாகத்திற்கு முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே வீட்டிற்குள் பூஜை போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள்.

யாரடி நீ மோகினி சீரியலில் அழகான வில்லியாக ஆனால், பார்வையாளர்களை கதிகலங்க வைக்கும் வில்லியாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் வலம் வந்த நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை வைத்துதான் ரசிகர்கள், யாரடி நீ மோகினி சீரியல் முடிக்கப்படுகிறதா என்று கேட்டு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

சைத்ரா வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குழுவினர் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைத்துகொண்டு ஒரு குரூப் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள். அதில், சைத்ரா இரண்டு புகைப்படங்களிலும் சந்தோஷமாக கண்களை மூடிக்கொண்டிக்கிறார்.

இந்த புகைப்படங்களைப் பற்றி சைத்ரா குறிப்பிடுகையில், “இந்த முகங்களை நான் மிகவும் மிஸ் பண்ணப்போகிறேன். சிலர் மிஸ் ஆனாலும், யாரடி நீ மோகினியில் கடைசி சில நாட்கள்” என்று குறிப்பிட்ட்டுள்ளார்.

சைத்ரா ரெட்டியின் இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள், யாரடி நீ மோகினி சீரியல் முடிக்கப்போகிறீர்களா? என்று கேட்டு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அதற்கு, இந்த சீரியலில் பேயாக நடித்துக்கொண்டிருக்கும் யமுனா சின்னத்துரை அப்போ என்னை மிஸ் பண்ணலையா என்று கமெண்ட் போட்டிருக்கிறார் .அதற்கு சைத்ரா நான் சிலபேரை மிஸ் பண்றேன்னுதான் என்று சொன்னேன். ஆனால், எனது இனிமையான உன்னை எப்படி மிஸ் பண்ணுவேன் என்று பதில் அளித்திருக்கிறார்.

யாரடி நீ மோகினி சீரியல் முதலில் தொடங்கியபோது அதனுடைய புரோமோ கதை எல்லாமே ஒரு பேய் சீரியல் போலத்தான் இருந்தது. ஆனால், உடனடியாகவே கதை மாறியது. ஆனாலும், இடையிடையே பேய் கதையும் வரும். இதனால், இந்த சீரியலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.

இந்த சீரியலில் முத்தரசன் கதாபாத்திரத்தில் முதலில்சஞ்சீவ் நடித்துக் கொண்டிருந்தார். அவர் இந்த சீரியலில் இருந்து விலகிய பிறகு அவருக்கு பதிலாக ஸ்ரீ குமார் நடித்து வருகிறார். இந்த சீரியலின் கதை என்னவென்றால் முத்தரசனுக்கு ஸ்வேதா வெண்ணிலா என இரண்டு அத்தை பெண்கள். அவர்கள் முத்தரசனை திருமணம் செய்துகொள்ள போட்டி போடுகிறார்கள். ஆனால், முத்தரசன் வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்கிறான். முத்தரசனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

தற்போது வெண்ணிலாவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும் அதில் ஆண் குழந்தையை ஸ்வேதா தன்னுடைய குழந்தை என எடுத்து வைத்துக்கொண்டு முத்தரசனையும் குடும்பத்தையும் மிரட்டி வருகிறாள்.

வெண்ணிலா ஸ்வேதா வைத்திருக்கும் குழந்தை தன்னுடையதுதான் என்று உணர்கிறாள். இந்த உண்மை எப்போது வெளிப்படும் என்று ரசிகர்கள் ஒவ்வொரு எபிசோடுக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் யாரடி நீ மோகினி சீரியல் முடிக்கப்பட்டு 2வது பாகம் தொடங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். யாரடி நீ மோகினி 2வது பாகம் புது கதையா? அல்லது முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அதிலும் ஸ்வேதா இருக்கிறாரா என்று ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Yaaradi Nee Mohini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment