ஓவர் அலப்பறை செய்யும் மாறன்.. தனிமரமாக தவிக்கும் கண்மணி - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா மாறன் மறுவீட்டிற்காக முத்துலட்சுமி வீட்டிற்கு வந்துள்ள நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.வீரா தனது குடும்பத்தார் முன்னிலையில் தன்னுடன் சந்தோசமாக இருப்பது போல் நடித்து வருவதால் இதையே காரணமாக வைத்து வீரா குடும்பத்தார் முன்னிலையில் அவளுடன் சந்தோசமாக இருப்பது போல் நடிக்க தொடங்குகிறான் மாறன்.
வீராவை தனது மனதுக்கு பிடித்து போல் தங்கம், செல்லம், குட்டி என பேசி அட்றாசிட்டி செய்கிறான். வீராவும் கோப்பட முடியாமல் அமைதியாக இருக்கிறாள். மாறன் அவளுக்கு ஊட்டி விடுவது வீராவை தனக்கு ஊட்டி விட வைப்பது என அலறப்பரையை அதிகரித்து கொண்டே செல்கிறான். முத்துலட்சுமியும் பிருந்தாவும் மாறன் வீராவை பார்த்து கொள்வதை பார்த்து சந்தோசப்படுகின்றனர், கண்மணியிடம் அவங்க எவ்வளவு சந்தோசமாக இருக்காங்க பாரு, நீயும் அப்படி இரு என்று சொல்ல கண்மணி கடுப்பாகிறாள்.
அதை தொடர்ந்து ராகவன் தனியாக உட்கார்ந்திருக்க மாறன் என்னடா நீ தனியா உட்கார்ந்து இருக்க.. நீ தான் எங்களுக்கு விருந்து வைக்கணும் என்று சொல்லி அவனையும் கூட்டு சேர்த்து கொள்ள தனியாக நிற்கிறாள் கண்மணி. இந்த சமயத்தில் வள்ளி மாறனுக்கு போன் செய்து ஒரு நாள் இருந்துட்டு வர சொல்ல மாறனும் ஆமாம் அத்தை இருந்திட்டு தான் வரணும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முத்துப்பாண்டி, இசக்கி இடையே கூடும் நெருக்கம்.. சௌந்தரபாண்டிக்கு பாண்டியம்மா வைக்க போகும் ஆப்பு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி தட்டை எடுக்க போய் கையை கிழித்து கொண்ட நிலையில் இன்று சண்முகம் என்னமோ ஹைட்டா இருக்கேனு பேசுன என்று முத்துபாண்டியை கலாய்க்கிறான், அதன் பிறகு அவனுக்கு கட்டு போட்டு விடுகின்றனர். மறுபக்கம் பாண்டியம்மா சௌந்தரபாண்டியிடம் ஆம்பளைங்க ஜெயில் எல்லாம் எப்படி இருக்கும்? இன்னும் குரங்கு செல் எல்லாம் இருக்கா என்று கேள்வி எழுப்புகிறாள். ஆனால் சௌந்தரபாண்டி நான் ஜெயிலுக்கு எல்லாம் போகல அக்கா.. ஸ்டேஷனோடு வந்துட்டேன் என்று சொல்கிறான்.
இதை கேட்ட பாண்டியம்மா உன்னை நான் ஜெயிலுக்கு அனுப்பறேன், நான் அனுபவிச்ச வேதனையை நீயும் அனுபவிக்கனும் என்று மனசுக்குள் சபதம் எடுக்கிறாள். இதை தொடர்ந்து இங்கே முத்துப்பாண்டி சாப்பிட கஷ்டப்பட இசக்கி நான் ஊட்டி விடுறேன் என்று சொல்ல சண்முகம் உடன்குடி, பரணி மற்ற தங்கைகள் என எல்லாரையும் வாங்க அப்புறம் சாப்பிட்டுக்கலாம் என்று அழைத்து செல்கிறான்.
இசக்கி முத்துபாண்டியிடம் என அண்ணன் அப்படி தான் தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்ல அடி லூசு நீ எனக்கு ஊட்டி விடணும்னு தான் உங்க அண்ணன் எல்லாரையும் கூப்பிட்டுக்கிட்டு வெளியே போனான் என்று சொல்ல இசக்கி அண்ணனை நினைத்து சந்தோசப்படுகிறாள். அடுத்து வீட்டிற்கு வந்த இசக்கி நடந்த விஷயத்தை சொல்ல சௌந்தரபாண்டி கையில் அடிபட்டுடுச்சா என்று
பதற அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா என்று சொல்லி கிளம்புகிறான்.
மேலும் இசக்கி நான் தான் அவருக்கு ஊட்டி விட்டேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக்காக பாண்டியம்மா இதை கவனிக்கிறாள். முத்துபாண்டியும் இசக்கியும் சேர கூடாது என்பதும் சௌந்தரபாண்டி கவனமா இருக்கான், இந்த நேரத்துல அவன் நாம என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டான். ஏதாவது செய்ய வேண்டியது தான் முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“