Advertisment

ஹீரோவுக்கு செக் வைக்கும் வில்லி: திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் வீரா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Veera KArthd

கார்த்தியின் திட்டத்தை அறிந்த ஐஸ்வர்யா.. ரம்யாவுக்கு வந்த ஆப்பு

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவை கோவிலுக்கு வர வைத்து ரமேஷ் அபிராமியிடம் பரிகாரம் செய்ய வந்திருப்பதாக சொல்லி கோர்த்து விட்ட நிலையில் இன்று, ரம்யாவை அங்கபிரதர்சனம் செய்ய வைக்கின்றனர், அவளும் அபிராமி இருப்பதால் கோபத்தை காட்ட முடியாமல் செய்து முடிக்கிறாள்.இந்த பரிகாரம் நடந்து முடிந்ததும் அடுத்ததாக தீச்சட்டியை கையில் கொடுத்து கோவிலை சுற்றி வர வைக்கின்றனர்.

இதனை தொடர்ந்து எல்லாரும் ரமேஷ், ரம்யாவை பார்த்து அப்படியே சூர்யா, ஜோதிகா போலவே இருக்கீங்க என்று பாராட்டுகின்றனர். அதே போல் அய்யர் அப்படியே சிவன் பார்வதி போலவே இருக்கீங்க என்று சொல்ல ரம்யா கடுப்பாகிறாள். கடைசியாக ரமேஷ் கோவிலுக்கு வெளியே எல்லாருக்கும் பணத்தை கொடுக்க இது மொத்தமும் அவனோட செட்டப் என்பது தெரிய வருகிறது.

அதன் பிறகு அபிராமி வீட்டில் தீபாவை உட்கார வைத்து நலங்கு வைகின்றனர். இறுதியாக அபிராமி எல்லாரையும் விட யார் நலங்கு வச்சா தீபா சந்தோசப்படுவானு தெரியும் என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட்டு நலங்கு வைக்க சொல்ல இதை பார்த்து ரம்யா டென்ஷனாகிறாள். அதோடு மணக்கோலத்தில் இருக்கும் தனக்கு கார்த்திக் நலங்கு வைத்து விடுவதை போலவும் நினைத்து பார்க்கிறாள்.

பிறகு ரமேஷ் கார்த்திக் சார் தீபாவுக்கு நலங்கு வைத்தது போல ரம்யாவுக்கு நான் நலங்கு வைக்கணும் என்று சொல்ல ரம்யா அதெல்லாம் அனுமதிக்காதீங்க என்று சொல்ல அபிராமி ஆசைப்படுறாருல வைக்கட்டும் என்று சொல்லி ரமேஷை நலங்கு வைக்க வைக்கிறாள். இறுதியாக கார்த்திக் ரமேஷை தனியாக கூப்பிட்டு நீ பண்றதெல்லாம் பார்த்தால் நடிக்கிற மாதிரி தெரியலையே என்று சொல்ல ரமேஷ் ரம்யாவை உண்மையாகவே பிடித்திருப்பதாக சொல்கிறான்.

கார்த்திக் ரம்யா அப்பா கேட்டுக்கிட்டதால் தான் உன்னை கூட்டிட்டு வந்ததாக சொல்ல ஐஸ்வர்யா இதை ஒட்டு கேட்டு விடுகிறாள்.  இதெல்லாம் கார்த்தியோட பிளான் என்பதை அறியும் அவள் ரம்யாவிடம் போட்டு கொடுக்க முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த அபிராமி.. வீராவை பார்த்து மாறன் சொன்ன வார்த்தை

வீரா சீரியலில் நேற்றைய எபிசோடில் வீராவின் தோழியாக சூர்யா என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று, வீரா தன்னுடைய தோழி சூர்யாவுக்கு தனது குடும்பத்தினர், ராமச்சந்திரன் குடும்பத்தினர் என எல்லாரையும் அறிமுகம் செய்து வைக்கிறாள். சூர்யாவும் எல்லோரிடமும் செம கலகலப்பாக பழகுகிறாள். எல்லோரையும் அறிமுகம் செய்து வைத்த வீரா மாறனை மட்டும் மறந்து விடுகிறாள்.

பிறகு சூர்யா யார் இது என்று மாறன் குறித்து விசாரிக்க சொல்ற அளவுக்கு பெரிய ஆள் இல்லை என்று மாறனை வெறுப்பேற்றுகிறாள் வீரா. அதைத்தொடர்ந்து சங்கீத் ஃபங்ஷனில் பாம் வைக்க வந்த ரவுடி மீண்டும் மண்டபத்துக்குள் நுழைகிறான். முகம் தெரியாத பெண்மணி போன் செய்து கடந்த முறை எல்லாரும் தப்பிச்சுட்டாங்க ஆனா இந்த முறை அப்படி விடக்கூடாது.  மண்டபத்துல டௌரியா பெருசா பணம் கை மாற போகுது, அதை மட்டும் தூக்கிட்டு வந்துடு என்று சொல்ல இந்த ரவுடியும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி ஃபோனை வைத்து மக்களோடு மக்களாக கலக்கிறான்‌.

அடுத்து வீரா மாறனை கூப்பிட்டு எதுக்கு சும்மா சும்மா கண்ணடிக்கிற? நாளைக்கு எனக்கு கல்யாணம் நீ திருந்தவே மாட்டியா என்று கோபப்பட உன் கழுத்துல தாலி ஏறும் வரைக்கும் எனக்கு வாய்ப்பிருக்கு. நான் இப்படித்தான் இருப்பேன். உன் கழுத்துல நான் தான் தாலி கட்ட போறேன் என்று உறுதியாக சொல்ல வீரா கடுப்பாகிறாள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க சூர்யா இங்கு வர மாறன் காதல் குறித்து அவளுக்கு தெரிய வருமா என்ற பில்டப் எகிற கடைசியில் வீரா சூர்யாவை சமாளித்து விடுகிறாள்.  

அதைத் தொடர்ந்து நலங்கு வைக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்க மாறன் மாப்பிள்ளை அரவிந்தை ரூமுக்கு சென்று அழைத்து வருகிறான். அரவிந்த் மற்றும் வீரா என இருவரும் மேடை ஏற வள்ளி மாப்பிள்ளைக்கு துணை மாப்பிள்ளையா யாரு உக்காரு போவது என்று கேட்க தொடங்கி மாறனை துணை மாப்பிள்ளையாக உட்கார வைக்கிறாள்.

பிறகு வீரா, அரவிந்துக்கு நலங்கு வைக்கும்போது மாறனுக்கும் சேர்த்து நலங்கு வைக்கின்றனர். அவன் வீராவை அடிக்கடி பார்த்து கண்ணடிக்க இதையெல்லாம் பார்த்து கண்மணி கடுப்பாக மாறனை கவனித்த சூர்யா மாறன், வீராவுக்கு இடையே ஏதோ இருக்கிறது என சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment