விவாகரத்து வாங்க நடக்கும் வேலைகள்.. ஷாக் கொடுத்த வீரா - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் வள்ளி வீடியோவை காட்டி உண்மையை உடைத்ததும் வீரா யோசித்த நிலையில் இன்று, வீரா கண்மணி உன்னை சரி பண்றதுக்காக நான் அந்த வீட்டுக்கு வரேன் என்று சொல்லி தனது துணிகளை பேக் செய்து வெளியே வந்து ஆட்டோ எடுக்க முத்துலட்சுமி உட்பட எல்லோரும் காரணம் கேட்க எதுவும் சொல்லாமல் மாறனை வண்டியில் ஏற சொல்கிறாள்.
அதன் பிறகு மாறனுடன் ஆட்டோவில் கிளம்பி வரும் வீரா ஒரு மாலை கடையில் நிறுத்தி இரண்டு மாலை வாங்கி தனது கழுத்தில் ஒரு மாலையை போட்டுக்கொண்டு மாறனையும் மாலையை போட்டுக் கொள்ள சொல்கிறாள். இதையடுத்து மாறன் எங்க போறோம் என்று கேட்க வீட்டுக்கு போறோம் என்று மட்டும் சொல்கிறாள். பிறகு போகும் போது அம்மா கல்லறைக்கு சென்று விட்டு போகலாம் என்று சொன்னால் வீரா கல்லறைக்கு ஆட்டோவை விடுகிறாள்.
அடுத்து மாறன் மட்டும் கல்லறை அருகே சென்று அம்மாவிடம் வீரா கழுத்தில் விருப்பமில்லாமல் தாலி கட்டியது தப்புதான் அதுக்கு மன்னிப்பே கிடையாது என மனம் வருந்துகிறான். இதை தொடர்ந்து அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு கிளம்புகிறான். மறுபக்கம் ராமச்சந்திரன் வீட்டில் கண்மணி வக்கீலை வர வைத்து மாறன் வீராவுக்கு விவாகரத்து வாங்க எல்லா பேப்பரையும் ரெடி பண்ண மாறன் கையெழுத்து போடுவானா என்று ராமச்சந்திரன் கேட்க உங்க வீட்டு வாசல்ல தானே இருக்கேன் அதெல்லாம் வாங்கிடலாம் என்று நம்பிக்கை கொடுக்கிறார்.
வீரா எதுவும் மனசு மாறிட மாட்டாளே என்று ராமச்சந்திரன் கேட்க அதெல்லாம் அவ உறுதியா இருக்கா என்று கண்மணி சொல்லிக் கொண்டிருக்க மாறனும் வீராவும் ஆட்டோவில் மாலையில் கழுத்துமாக வந்து நிற்கின்றனர். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய வள்ளி சந்தோஷத்துடன் ஓடிப்போய் ஆரத்தி கரைத்து எடுத்து கொண்டு இருவரையும் வீட்டுக்குள் அழைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
காசியம்மா சொல்ல போகும் தீர்ப்பு என்ன? சுடர், எழில் ஒன்று சேர்வார்களா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் வீட்டை விட்டு கிளம்ப மனோகரி மாட்டி விட்ட நிலையில் இன்று, சுடர் எல்லாரும் ஒரு மாதிரி பேசுறாங்க, வருத்தமாக இருக்கு என்று சொல்ல கனகவல்லி அதுக்கு தான் ஊருக்கு போய் கசியம்மாவை பார்த்து குறி வைத்து கேட்க போறோம். அவங்க இந்த கல்யாணம் செல்லுமா செல்லதான்னு சொல்வாங்க, அதன் பிறகு முடிவு எடுத்து கொள்ளலாம் என்று சொல்ல சுடரும் சம்மதம் சொல்கிறாள்.
அதன் பிறகு இவர்கள் எல்லாரும் ஊருக்கு கிளம்ப சுடர் வெளியே வந்து ராமையாவிடம் இது பற்றி பேச அவர் காசியம்மா பற்றி விரிவாக எடுத்து சொல்கிறார். அடுத்து இந்து அங்கு வந்து எங்க கிளம்பிடீங்க என்று கேட்க காசியம்மா பற்றி சொன்னதும் இந்து அவங்களா என்று அதிர்ச்சி அடைகிறாள். இதை தொடர்ந்து இங்கே ஒரு ஸ்கூல் பொண்ணு கழுத்தில் ஒருவன் தாலி கட்டி விட்டதாக சொல்லி பஞ்சாயத்து கூடி இருக்க காசியம்மா தீர்ப்பு சொல்ல வருகிறார்.
தாலி கட்டியவன் நான் அந்த பொண்ணை காதலிச்சேன். அதனால் தாலி கட்டிட்டேன் என்று சொல்கிறாள். அந்த பெண்ணிடம் கல்யாணத்தில் விருப்பமா என்று கேட்க இல்லை என்று சொன்னதும் இந்த கல்யாணம் செல்லாது என்று தீர்ப்பு சொல்லி தாலியை கழட்டி பாலில் போட சொல்கிறாள். பிறகு பஞ்சாயத்து முடிந்து கூட்டம் களைந்து செல்ல ஒருவன் ஓடி வந்து உங்களை பார்க்க சென்னையில் இருந்து கனகவல்லி குடும்பம் வந்திருப்பதாக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.