Advertisment

தம்பிக்கு எதிராக அக்கா ஆட்டம்: ரொமான்ஸ் களத்தில் மாறன்; தீபா திரும்பி வருவாரா?

ஜீ தமிழின் வீரா, கார்த்திகை தீபம், மற்றும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்துது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial Vera sns

மாறனிடம் ஓவர் நெருக்கம் காட்டும் வீரா.. கண்மணி திட்டத்துக்கு வந்த செக்மேட் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா மாறனுடன் சந்தோசமாக இருப்பது போல் அவனுடன் பைக்கில் ஏறி கடைக்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது கடையில் வேலை செய்பவர்கள் வீரா மாறனை நல்லபடியாக வரவேற்கின்றனர். இந்த சமயத்தில் பக்கத்துக்கு கடைக்காரனான முதியவர் ஒருவர் மாலையை வாங்கி வந்து வீரா மாறனிடம் கொடுத்து மாலை மாற்றி கொள்ள சொல்கிறார். பிறகு மாலை மாற்றி கொண்டதும் அவர் வாழ்த்து சொல்லி விட்டு கிளம்ப வீரா இதெல்லாம் உன் வேலையா என்று மாறனிடம் கோபப்படுகிறாள்.

ஆனால் மாறன் எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நீ நம்புனா நம்பு இல்லாட்டி போ என்று சொல்லி விடுகிறான்.  இங்கே வீட்டில் வடிவு மற்றும் கண்மணி என இருவரும் சேர்ந்து கொண்டு ராமச்சந்திரனிடம் வீராவையும் மாறனையும் தனி குடித்தனம் வைத்து விடலாம் என்று பேச ராமசந்திரன் வீராவோட நல்லதுக்காக அவ இந்த வீட்டில் தான் இருக்கனும் என்று சொல்லி விட கண்மணி திட்டம் தோல்வியடைகிறது.

அதன் பிறகு வீரா கடையில் இருந்து வீட்டிற்கு கிளம்ப மாறன் எப்படியும் ஆட்டோவில் தான் போக போறா என்று நினைக்க வீரா மாறனுடன் வண்டியில் ஏறி லவ்வர் போல் அவனை கட்டி பிடித்து கொண்டு வீட்டிற்கு வருகிறாள். வீரா, மாறன் கை கோர்த்தபடி வீட்டிற்குள் நுழைய மறு வீட்டிற்கு அழைக்க வந்திருந்த அவளது அம்மா பார்த்து விட்டு சந்தோசப்படுகிறாள்.

பிறகு ராமச்சந்திரனிடம் வீராவையும் மாறனையும் மறு வீட்டிற்கு அழைக்க வந்திருப்பதாக சொல்ல அவர் நான் இந்த விஷயத்தில் தலையிட மாட்டேன், முடிவு எடுக்க வேண்டியது அவங்க தான் என்று சொல்ல வீராவின் அம்மா வருத்தமடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஷாக் கொடுத்த சண்முகம்.. சௌந்தரபாண்டிக்கு கெடு வைத்த பாண்டியம்மா - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா ஷண்முகம் வீட்டிற்கு வந்து சூடாமணி போட்டோவை பார்த்து ஓடுகாளி என்று பேசி விட்டு சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, பாண்டியம்மா வீட்டிற்கு வந்து சூடாமணியை திட்டி பேசியதை நினைத்து பரணி, தங்கைகள் என எல்லாரும் கோபத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த விஷயம் ஷண்முகத்திற்கு தெரிய வேண்டாம் என்று பரணி சொல்கிறாள். ஆனால் வீட்டிற்கு வந்த ஷண்முகம் பாண்டியம்மா என்ன சொன்னா என்று கேட்க பரணி ஷாக்காஜி சமாளிக்க முயற்சி செய்கிறாள்,

கனி எனக்கு போன் செய்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா என்று சொல்லி கோபமாகி அங்கிருந்து சௌந்தரபாண்டி வீட்டிற்கு கிளம்பி வருகிறான். குடும்பத்தினர் அனைவரும் சண்முகம் மீண்டும் அருவா எடுத்துட போறான் என்று பதற சண்முகம் என் வீட்டிற்கு வந்து என் அம்மாவையே தப்பா பேசுவியா என்று பொறுமையாக பேசி முத்துபாண்டியிடம் பாண்டியம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்கிறான்.

அருவா எடுத்து தம்பியை வெட்டுவான் என்று எதிர்பார்த்த பாண்டியம்மா சண்முகத்தின் பொறுமையை பார்த்து ஷாக் ஆகிறாள், வேறொரு திட்டத்தை தான் போடணும் என்று முடிவெடுக்கிறாள். இந்த நேரத்தில் சௌந்தரபாண்டி வீட்டில் எல்லாரும் பாண்டியம்மாவை வெளியே போக சொல்ல சௌந்தரபாண்டி நீ வெளியே போய்டு அக்கா என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து பாண்டியம்மா சௌந்தரபாண்டியை தனியாக அழைத்து சென்று நீ அடிச்ச நகையில் பாதி நகை இன்னும் என்கிட்டே தான் இருக்கு. நீ என்னை வீட்டை விட்டு அனுப்பினா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இந்த திருட்டுல உனக்கும் பங்கு இருக்குனு சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறாள். மேலும் நான் வீட்டை விட்டு போற மாதிரி போவேன், நீ என்னை தடுத்து நிறுத்தி வீட்டுக்குள்ள கூப்பிடனும், இல்லனா நீயும் கம்பி தான் எண்ணனும் என்று எச்சரிக்கை விடுக்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திக் கேட்ட கேள்வி.. கலக்கத்தில் ஐஸ்வர்யா, தீபா நிலை என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா விஷயத்தில் ஐஸ்வர்யாவுக்கு தொடர்பு இருக்கு என்று கார்த்திக்கு தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, நர்ஸ் ஷக்தி ரவுடிகளிடம் இருந்து தீபாவை காப்பாற்றுவதற்காக அவளை அழைத்து கொண்டு ஒரு ஹாம்க்கு வருகிறாள். தீபா ஏற்கனவே அந்த ஆசிரமத்தில் பாடி இருக்கிறாள் என்பதால் அவளை பார்த்ததும் தீபாவுக்கு என்னாச்சு என்று விசாரிக்க நர்ஸ் ஷக்தி நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி தீபாவை அங்கே ஒப்படைத்து விட்டு வருகிறாள்.

பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர ஆனந்த் வீட்டில் இருப்பது கீதாவாக என்று கேட்க கார்த்திக் ஷாக் ஆகிறான், மேலும் நான் துங்காவிடம் பேசவா என்று கேட்க வேண்டாம் என்று சொல்கிறான். மேலும் துங்கா பெரிய ஆளு, பணபலம் கொண்டவன் அதான் இந்த விஷயத்தை அவனிடம் சொல்ல வேணாம் என்று சொல்கிறான். இதை தொடர்ந்து ஐஸ்வர்யா வீட்டிற்கு வர கார்த்திக் அவளை தடுத்து நிறுத்தி எங்க அண்ணி போயிட்டு வரீங்க என்று கேட்கிறான். 
ஐஸ்வர்யா ப்ரண்ட் வீட்டிற்கு சென்று வருவதாக சமாளிக்கிறாள்.

மேலும் கார்த்திக்கு சந்தேகம் வந்துடுச்சு எனவும் பயப்படுகிறாள். ஆசிரமத்தில் தீபா படுத்திருக்க மதர்ஸ் மற்றும் பார்வையற்ற குழந்தைகள் அவளை சுற்றி உட்கார்ந்து கொண்டு அவளுக்காக பிராத்தனை செய்ய திடீரென தீபாவுக்கு அளவுக்கு அதிகமாக காய்ச்சல் உண்டாக அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment