Advertisment

வில்லிக்கு செக் வைத்த ஹீரோ: பத்திரிக்கையில் பேர் இல்லாததது ஒரு குத்தமா? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்!

ஜீ தமிழின் சந்தியா ராகம் வீரா கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil KP SR Veera

சந்தியா ராகம் - வீரா - கார்த்திகை தீபம்

கார்த்தி வைத்த செக்மேட்..  ரம்யா கொடுத்த மிரட்டல், தீபா முடிவு என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவின் அப்பா தரகரை அழைத்து வந்து மாப்பிள்ளை பார்க்க சொல்லிய நிலையில் இன்று, அப்பா தரகருடன் வந்ததும், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்ல தரகர் சில போட்டோக்களை காட்ட ஒரு மாப்பிளையை தேர்வு செய்து பேச சொல்கிறார். இதனால் ரம்யா இன்னும் அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்து விஸ்வநாதன் கார்த்தியை சந்தித்து நீங்க சொன்ன மாதிரியே பண்ணிட்டேன் தம்பி என்று சொல்ல, இன்னொரு பக்கம் ரம்யா தரகரை மடக்கி மாப்பிள்ளையின் போன் நம்பரை வாங்குகிறாள். பிறகு ரியாவை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்லி உதவி கேட்கிறாள். பிறகு மாப்பிள்ளைக்கு போன் செய்து நீ பொண்ணு பார்க்க வரவே கூடாது, இல்லனா என்னை பிடிக்கலைனு சொல்லிடணும் என்று மிரட்ட அவனும் ஓகே என்று போனை வைக்கிறான்.

அதன் பிறகு தர்மலிங்கம், ஜானகி தீபாவுக்கு இந்த கல்யாணம் நடக்க கூடாது, ஒருவேளை கல்யாணம் நடந்தா அபிராமி அம்மா உயிருக்கே ஆபத்து ஆகிரும், எப்படியாவது இதை நிறுத்திடனும் என்று பேசி கொண்டிருக்க ஐஸ்வர்யா இதை கேட்டு விடுகிறாள். கார்த்தியிடம் விஷயத்தை சொல்லிடலாம் என்று முடிவெடுக்கும் அவள் அவனை தேடி ரூமுக்கு வர ங்கு தீபா இருக்கிறாள். 

இதனை பயன்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யா, தீபாவிடம் மொத்த விஷயத்தையும் உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பத்திரிக்கையில் இல்லாத மாறன் பெயர்.. வீரா எடுத்த முடிவு, மாறன் கொடுத்த ட்விஸ்ட்

வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் மாறன் வருத்தமாக இருக்க வள்ளி வீரா கழுத்தில் தாலி கட்டுற வேலையை பாரு என்று சொல்லிய நிலையில் இன்று, மாப்பிள்ளையின் அப்பா ராமச்சந்திரனுக்கு போன் செய்து கல்யாணத்துக்கு போட வேண்டிய நகையை எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சா என்று கேட்கிறார். பிறகு புடவையை உங்க கடையிலேயே எடுத்திடலாம் என்று சொல்ல ராமச்சந்திரனும் ஓகே சொல்கிறார். 

இதை தொடர்ந்து மாறன் வீட்டிற்கு வந்ததும் ராமசந்திரன் மாப்பிள்ளை வீட்டிற்கும் பொண்ணு வீட்டிற்கும் போய் கல்யாண பத்திரிக்கை சேம்பிலை காட்டி விட்டு துணி எடுக்க போற விஷயத்தை பத்தி சொல்லிட்டு வந்துடுங்க, மாப்பிள்ளையோட அப்பா கிட்ட பார்த்து பேசுங்க என்று சொல்லி அனுப்ப மாறன் மைண்ட் வாய்ஸில் உன்ன தாண்டா தேடிட்டு இருக்கேன் என்று சொல்கிறான்.

அடுத்து வீரா வீட்டிற்கு வந்து பத்திரிக்கையை காட்ட அதில் மாறன் பேர் இல்லாமல் இருக்க அவனது பேரை சேர்க்க சொல்கிறாள். மாறன் பேர் இல்லனா என்ன என்று சொல்ல, வீரா கண்டிப்பா உன் பேர் இருக்கணும். நீயே சேர்க்க சொல்றியா? இல்ல ராமசந்திரன் சார் கிட்ட பேசட்டுமா என்று கேட்க மாறன் நானே சேர்க்க சொல்றேன் என்று சொல்கிறான்.

மறுபக்கம் மாப்பிள்ளை வீட்டார் ராமசந்திரன் கடையில் துணி எடுப்பதால் எவ்வளவு வேணாலும் எடுத்து கொள்ளலாம். அந்த ஆள் இப்போ நாம என்ன கேட்டாலும் செய்து தருவார். அது நம்ம கடை மாதிரி என்று மொத்தமாக மொட்டையை போட திட்டமிடுகின்றனர். அடுத்த நாள் காலையில் ராமசந்திரன் துணி கடைக்கு துணி எடுக்க இரண்டு குடும்பத்தினரும் வருகின்றனர். என் மருமகளுக்கு இருக்கிறதேலே காஸ்லியான  புடவையோ எடுத்து போடுங்க என்று சொல்கிறான் மாப்பிள்ளையின் அப்பா.

மாப்பிள்ளை வீராவையே வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க புடவையை எடுத்து வீராவை தொட்டு பேச நெருங்க மாறன் குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்துகிறான். பிறகு அவனே ஒரு புடவையை எடுத்து வீராவுக்கு இது நல்லா இருக்கும் என்று சொல்கிறான், மாப்பிள்ளையும் ஓகே சொல்ல வைக்கிறான். இதையெல்லாம் பார்த்து கண்மணி கடுப்பாகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்தடுத்து உடையும் உண்மைகள்.. ஜானகி கொடுத்த அதிர்ச்சி, நடக்க போவது என்ன? 

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீனு மாயாவை சந்தித்து கல்யாணம் குறித்து பேச பத்மா லெட்டரை படித்து விட்ட நிலையில் இன்று, லெட்டரை படித்த பத்மா அதிர்ச்சி அடைகிறாள், மறுபக்கம் சீனு பேசியதை நினைத்து மாயா அப்செட்டில் இருக்கிறாள். இதை பார்த்த தனம் என்னாச்சு என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறாள்.

அடுத்து ரகுராமும் சிவராமும் வயலுக்கு கிளம்ப பத்மா அந்த லெட்டரை மறைத்து விட மணி என்ன மறைக்கிற என்று கேட்டு லெட்டரை பிடிங்கி படித்து ஒன்றுமே தெரியாதது போல அதிர்ச்சி அடைகிறான். இந்த விஷயத்தை உடனே மச்சான் கிட்ட சொல்லிடணும் என்று சத்தம் போட பத்மா அமைதியா இருயா என்று தடுத்து நிறுத்துகிறாள்.

மாயா தான் இப்படியெல்லாம் பண்ணி இருப்பா என்று பார்வதி சொல்ல பத்மா இந்த விஷயத்தை சிவராமனிடம் சொல்லலாம் என்று முடிவெடுக்க வயலுக்கு போன சிவராம் வீட்டிற்கு வர அவனை கூப்பிட்டு லெட்டரை கொடுக்க அதை படித்த அவன் அதிர்ச்சி அடைகிறான். அவங்க காதலிக்கும் விஷயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும் என்று சொல்ல எதுக்கு சொல்லல என்று கோபப்படுகிறான்.

அண்ணனுக்கு தெரியாமல் சீனுவை கண்டுபிடிக்க சொல்கிறாள் பத்மா, பிறகு சிவராமன் அண்ணன் கிட்ட கணக்கு நோட்டை கொடுத்திட்டு மரக்கடைக்கு போறதா சொல்லிட்டு தேடுவதாக சொல்ல மணி நானும் வரேன் என்று கிளம்பி செல்கிறான்.  பிறகு சிவராமன் சீனுவை தேடி செல்ல ரகுராம் வீட்டிற்கு வந்து சிவராமனை கேட்க ஜானகி உங்க கூட தானே வந்தாரு என்று கேட்க மரக்கடைக்கு போறதா போனான், இன்னும் வரலையா என்று கேட்டு மணியை கேட்க அவரும் வெளியே போய் இருப்பதாக சொல்ல ரகுராம் ஒரு சின்ன வேலை செய்ய இந்த வீட்டில் யாரும் இல்லையா என்று கடுப்பாகி வெளியே செல்கிறார்.

பிறகு ஜானகி பார்வதி, பத்மா நடந்து கொள்வதை பார்த்து சந்தேகமடைந்து சிவராமனுக்கு போன் செய்ய அவன் சீனு மாயா காதலிக்கும் விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று கேட்க ஜானகி அது பழைய கதை என்று சொல்ல சிவராமன் இல்ல இது புதுக்கதை என்று கடிதம் பற்றி சொல்ல ஜானகி அதிர்ச்சி அடைகிறாள். சீனு மாயாவை பார்க்க தான் போய் இருப்பான், நீ அங்க போய் பாரு என்று சொல்ல சிவராமன் கிளம்பி சென்று சீனு வந்தானா என்று விசாரிக்க மாயா இல்லை என்று பொய் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment