Advertisment

இதைத் தானே நாங்க எதிர்பார்த்தோம்... இந்த காம்போ சூப்பர் : வீரா சீரியலை கொண்டாடும் ரசிகர்கள்

ஜீ தமிழின் வீரா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தற்போதைய ப்ரமோ ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Veera Mara

வீரா சீரியல்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஜீ தமிழ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய வீரா சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சீரியலின் சமீபத்திய ப்ரமோவுக்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலில் பாண்டியனின் இறப்பை தொடர்ந்து கண்மணி பழி வாங்க பிளான் போட்டு ராகவனை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில் தற்போது வரை கல்யாண டிராக் தான் சென்று கொண்டிருக்கிறது.

Veera Maran

வள்ளியின் சதியால் கண்மணியின் கல்யாணத்தை நாங்களே நடத்தி வைக்கிறோம், கழுத்து நிறைய நகை போட்டு அனுப்புறோம் என வீரா சவாலுக்கு மேல் சவாலை ஏற்று அதை எப்படி நிறைவேற்றுவது என திணறி வருகிறார். காலையில் ராமச்சந்திரன் கடையில் வேலை, நைட் ஆட்டோ ஓட்டுவது என வீராவின் தியாகம் நீண்டு கொண்டே செல்கிறது.

மேலும் ரசிகர்கள் ஆரம்பத்தில் இருந்தே நாயகி வீரா, நாயகன் மாறன் காம்போவில் காட்சிகள் வேண்டும் என்று தொடர்ந்து கேட்டபடி இருந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கை சீரியல் குழுவினரின் காதுக்கு சென்றுள்ளது. அதன்படி  தற்போது வெளியாகியுள்ள வீரா ப்ரோமோவை பார்த்து அவ்வளவு உற்சாகமடைந்துள்ளனர். நைட் நேரத்தில் மாறன் ரோட்டில் விழுந்து கிடக்க, வீரா அவனை ஆட்டோவில் தூக்கி போட்டு வீட்டில் டிராப் செய்கிறாள்.

மறுநாள் வீட்டிற்கு விட்டதற்காக மாறன் பணம் கொடுக்க, வீரா அவனிடம் 1000 ரூபாய் வேண்டும் என்று சொல்லி வம்பு செய்கிறாள். இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப நாளா இதை தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம். இந்த டாம் அண்ட் செரி காம்போ கூட சூப்பரா இருக்கு. எங்க கோரிக்கை உங்க காதுக்கு இப்ப தான் கிடைச்சிருக்கு என்று ரசிகர்கள் கமெண்ட்டுகளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment