ஆக்ரோஷமான அக்கா: சவால் விட்ட தங்கச்சி; மாமனார் வீடு வாழுமா? வீழுமா?

உடன் பிறந்த தங்கைக்கே அக்கா வில்லியாக மாறியுள்ள வீரா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

உடன் பிறந்த தங்கைக்கே அக்கா வில்லியாக மாறியுள்ள வீரா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Veera Serial

சுயரூபத்தை காட்டிய கண்மணி.. வீரா விட்ட சவால், மாறனுக்கு ஷாக் - வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கண்மணி வீராவை சந்தித்து எதுக்கு வந்த என்று கேள்வி கேட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வீரா, உன்னால் தான் இந்த வீட்டிற்குள் வந்தேன், பழி வாங்குற எண்ணத்தை விட்டுட்டு மாமாவோட ஒழுங்கா சேர்ந்து வாழுற வழியை பாரு என்று அட்வைஸ் கொடுக்கிறாள். ஆனால் கண்மணி என்னால் அப்படி வாழ முடியாது என்று சொல்கிறாள். மேலும் இதுவரைக்கும் இந்த கண்மணியை அக்காவாக தான் பார்த்து இருப்ப.. இனிமே என்னுடைய இன்னொரு முகத்தை பார்ப்ப.. இந்த குடும்பத்தை மொத்தமாக அழிச்சி ஒன்னும் இல்லாமல் ஆக்கி காட்டுறேன் என்று சொல்கிறாள்.

இதை கேட்ட வீரா நான் இருக்கிற வரைக்கும் உன்னால் ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விடுகிறாள். அதை தொடர்ந்து கடையில் இருந்து ஆட்கள் வர வீரா நான் நைட் சடங்குக்கு ரெடியாகணும் என்று ரெடியாகணும் என்று சொல்லி கிளம்ப கண்மணி கடுப்பாகி அங்கிருந்து வெளியேறுகிறாள். இன்னொரு பக்கம் ராகவனும் கார்த்தியும் அப்பாவை மீறி மாறன், வீராவிடம் எந்த உறவும் வச்சிக்க கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.

Advertisment
Advertisements

அடுத்து ராகவன் கண்மணியிடம் வீரா உன்னுடைய தங்கச்சி.. எங்களை மாதிரி நீயும் அவளை ஒதுக்கி வச்சிடாத, அவ கிட்ட எப்பவும் போல பேசு என்று சொல்கிறான். வீரா ரூமுக்குள் ரெடியாகி கொண்டிருக்க அங்கு வந்த வள்ளி கண்மணியோட வாழ்க்கையை சரி செய்யணும். சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்க அப்போ தான் பந்தம் வலுவாகும் என்று அட்வைஸ் செய்கிறாள்.

ரூமுக்குள் மாறன் முதலிரவுக்கு ரெடியாகி வீரா தன்னிடம் அன்பாக நடந்து கொள்வது போல் கனவு கண்டு சந்தோஷப்பட கதவை தட்டி விட்டு உள்ளே வரும் வீரா மாறனிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி ஷாக் கொடுக்கிறாள். மாறனை மனதார இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என பதிவு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zee Tamil Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: