ஜீ தமிழ் சீரியல் நடிகை தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் குவாரண்டைன் டிப்ஸ்களை அளித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடரில் வெண்ணிலாவுக்கு எதிராக வில்லி ஸ்வேதா செய்யும் சதிகளை முறியடிக்கும் விதமாக நடிக்கும் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் நடிகை ஸ்ருதி செல்வம். இந்த சீரியலில் இருந்து சில தனிப்பட்ட காரணங்களால் ஸ்ருதி செல்வம் பாதியிலேயே விலகினார்.
இதையடுத்து, ஸ்ருதி செல்வம் பிக்பாஸ் புகழ் சாண்டி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சாண்டியுடன் ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி செல்வம் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அது மட்டுமில்லாமல், ஸ்ருதி செல்வம் மேலும் சில படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீரியல், சினிமா என பிஸியாக இருந்தாலும் ஸ்ருதி செல்வம், சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களையும் அவர் டான்ஸ் ஆடுகிற வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாம் அலை காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழலில், ஸ்ருதி செல்வம் கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சிய அடைய வைத்துள்ளார். இதைனை அறிந்த ரசிகர்கள், ஸ்ருதி செல்வத்துக்கு குவாரண்டைன் டிப்ஸ்களை வழங்கி வருகின்றனர்.
இது குறித்து ஸ்ருதி செல்வம் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் குறிபிடுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய மருத்துவர்களின் வழிகாட்டுதலின் பேரில், நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உங்கள் அனைவருடைய அன்பும் பிரார்த்தனைகளும் வேண்டும். பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி செல்வம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு குவாரண்டைனில் என்னென்ன செய்ய வேண்டும் என டிப்ஸ்களை வாரிவழங்கி வருகின்றனர்.
ரசிகர் ஒருவர், “அர்சேனிகா ஆல்பம்200 மருந்து, எலுமிச்சை, மிளகு, மஞ்சள், இஞ்சி, கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் எடுத்துக்கொள்ளுங்கள். காலை 7.15 - 8 மணி வரை சூரிய ஒளியில் ஆழ்ந்து மூச்சு பயிற்சி செய்யுங்கள்.” என்று டிப்ஸ் கொடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.