தமிழில் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சமையல் ரியாலிட்டி ஷோ-வை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் மற்றொரு தனியார் தொலைக்காட்சியும் இணைகிறது.
விஜய் டி.வி குக் வித் கோமாளி என்ற புதுமையான சமையல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இதற்குப் போட்டிகாக சன் டி.வி டாப் குக் டூப் குக்-வை அறிமுகம் செய்து ஒளிபரப்பி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியும் புதிதாக சமையல் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 'சமையல் எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் நடிகை சீதா தோன்றி இருக்கிறார்.
ப்ரோமோ பார்ப்பதற்கு பாரம்பரிய முறையில் சமையல் நிகழ்ச்சி அமைவது போல் தெரிகிறது. ப்ரோமோவில் சமையல் செய்வது போல் தோன்றும் சீதா, அவங்க வீட்டு சமையலை பாத்திருப்பீங்க, இவங்க வீட்டு சமையலை பாத்திருப்பீங்க.. நம்ம வீட்டு சமையலை பார்க்க ரெடியா? என்று கூறியிருப்பார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“