தமிழ் தொலைக்காட்சிகளில், ஜீதமிழ்குடும்பவிருதுகள் பிரம்மாண்ட விருது வழங்கும் விழாவாக நடத்தப்படுகிறது. இந்த, ஆண்டு விருது வழங்கும் விழாவின் ஒரு முன்னோட்டமாக 26 ஜி தமிழ் நட்சத்திரங்கள், 3 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவே சமையலறை படுக்கையறை கிச்சன் என அனைத்தையும் கொண்ட பிக் பாஸ் வீடாகவே உள்ளது.
Advertisment
இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல ப்ரோமோ வீடியோக்களை ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோவில், ராஜா மகள் சீரியலில் நடித்து வரும் ஐரா அகர்வாலிடம், தனது காதலை வெளிப்படையாக சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தெரிவிக்கிறார். இதற்கு, நடிகை ஐரா அகர்வால் சிரித்து கொண்டே புன்னகைக்கிறார்.
ப்ரோமோ வீடியோ:
Advertisment
Advertisements
கண்மணி, கடைக்குட்டி சிங்கம், ராஜா மகள் தவிர, பெரிய திரையிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் ஐரா. 2014-ம் ஆண்டு, ‘மிஸ் தென் இந்தியா’வாக தேர்வு பெற்றவர் இவர். ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தையும் வென்றிருக்கிறார்.