விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஜானுவாக நடித்து ரசிகர்களிடையே ரீச் ஆனவர் மோனிஷா. கேரளாவை சேர்ந்தவர். கல்லூரி படிப்பை முடித்து மலையாள சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். மாடலிங்கும் செய்து வந்தார். இந்த சீரியலில் மோனிஷா ஜானு குட்டி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதன் மூலம் கிடைத்த வரவேற்பு ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கி வந்தார். அதன்பிறகு தான் விஜய் டிவி அரண்மனை கிளி வாய்ப்பு. திருமணமாகி கேரளாவில் வசித்து வருகிறார். தற்போது ஜீ தமிழின் பூவே பூச்சூடவா தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். வித விதமான நகை அலங்காரத்தோடு ஜொலிப்பது போல் போட்டோவை போட்டு இன்ஸ்டாவை கலக்கி வருகிறார் ஜானு.

















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil