ஜீ தமிழின் சத்யா சீரியலில் நடித்து வருபவர் ஆயிஷா. கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அப்போது தான் அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் சீரியலிலேயே, ‘பொன்மகள் வந்தாள் ரோகினி’ என குறிப்பிடும் அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின்னர் சன் டிவி-யின் ‘மாயா’, தற்போது ‘சத்யா’ என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் ஆயிஷா அதற்கான முக்கிய முயற்சியாக, தனது விதவிதமான படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
Advertisment
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil