ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை சீரியலில் தென்றல் கேரக்டரில் நடித்து வருபவர் நக்ஷத்திரா ஸ்ரீனிவாசஸ். பெங்களூருவை சேர்ந்த இவர் கன்னடத்தில் கிருஷ்ணா ருக்மணி என்ற தொடரில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் கோரந்த தீபம், புன்னகா போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பாப்புலரானார். Chethilo Cheyyesi Cheppu Bava என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன்டிவியின் மாயா, கலர்ஸ் தமிழ் சேனலின் சிவகாமி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது மார்டன் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.















தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil