விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ஹீரோ கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷாலி தனிகா. சென்னையை சேர்ந்த இவர் மாலை நேரம் என்ற குறும்படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கதக்களி திரைப்படத்தில் நடித்தார். பிறகு விஜய்டிவியின் மாப்பிள்ளை சீரியலில் ஸ்ரீஜாவின் தங்கையாக நடித்தவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்துள்ளார். விஜய் நடித்த சர்க்கார், சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, சீமராஜா, பிரபுதேவாவின் யங் மங் சங் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்து வருகிறார். தற்போது மகராசி தொடரிலும், விஜய் டிவியின் புதிய சீரியலான நம்ம வீட்டு பொண்ணு சீரியலிலும் நடிக்கிறார்.















தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil