Zero Full Movie Leaked in Tamilrockers: அனுஷ்கா ஷர்மா - ஷாருக்கான் நடித்த ‘ஸீரோ’ படத்தையும் ஆன் லைனில் வெளியிட்டு பாலிவுட்டை பதற வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இந்தியில் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு வில்லனாக களம் இறங்கியிருப்பது இந்த ‘ஸீரோ’. அதற்கு வில்லனாக தமிழ் ராக்கர்ஸ் தலை தூக்கியிருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை படங்களை திருட்டுத்தனமாக ஆன் லைனில் வெளியிட்டு வருகிறது. அதுவும் புதிய திரைப்படங்களை அவை வெளியான சில மணி நேரங்களில் அதே ஹெச்.டி தரத்துடன் வெளியிடுவதுதான் திரையுலகினரை கொந்தளிக்க வைக்கிறது.
Zero Full Movie in tamilrockers: அதிர்ச்சியில் பாலிவுட்
தமிழில் சமீப நாட்களில் வெளியான 2.0, சர்கார், சாமி 2, சீமராஜா மட்டுமல்லாமல், நேற்று வெளியான மாரி 2, கனா வரை களவாடிவிட்டது தமிழ் ராக்கர்ஸ். அண்மையில் வெளியான பிரபல மலையாளப் படமான ஒடியனையும் ஆன் லைனில் வெளியிட்டது.
இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸின் லேட்டஸ்ட் திருட்டு, ‘ஸீரோ’. இந்தியில் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் - அனுஷ்கா ஷர்மா நடிப்பில் டிசம்பர் 21-ம் தேதி வெளியானது ‘ஸீரோ’. அந்தப் படம் வெளியாகி சில மணி நேரங்களில் தனது இணையதளத்தில் முழுப் படத்தையும் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.
இந்தியில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வசூல், ‘ஸீரோ’வின் ரிலீஸால் பாதிக்கும் என பேசப்பட்டது. ஆனால் ‘ஸீரோ’வின் வசூலுக்கே வில்லனாக தமிழ் ராக்கர்ஸ் வந்திருக்கிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஷாருக்கான் - அனுஷ்கா ஷர்மா நடித்த படத்தையே வெளியிட்டிருப்பது பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. உள்ளூர் முதல் ஹாலிவுட் வரை தமிழ் ராக்கர்ஸால் சினிமா உலகம் பாதிக்கப்பட்ட போதும், அதற்கு மூக்கணாங்கயிறு போடும் தொழில் நுட்பத்தை கண்டறிய முடியவில்லை. மொத்த சினிமா உலகமும் கை பிசைந்து நிற்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.