Zombi First Look : கோலிவுட்டின் சிறந்த காமெடியன் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருக்கும் யோகி பாபுவுக்கு மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. ஜாம்பி படத்தில் யாஷிகாவுன் இணைந்து நடிக்கிறார்.
2009ம் ஆண்டில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்குள் அறிமுகமானவர் பாபு. இந்த படத்திற்கு பிறகு யோகி பாபு என பிரபலமாக அழைக்கப்பட்ட இவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்தார்.
ஜாம்பி படத்தில் யோகி பாபு மற்றும் யாஷிகா
2018ம் ஆண்டு மட்டுமே 20 படங்களில் அதிகமாக நடித்த ஒரே காமெடி நடிகர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். அது மட்டுமின்றி, முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்த எல்லா படங்களின் காமெடியுமே ஹிட் தான். கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் நடிக்க பலரும் போட்டிப்போட்டு வரும் நிலையில், கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா ஜோடி சேர்ந்தார் யோகி பாபு.
இதல்லவா வளர்ச்சி... மாஸ் காட்டும் யோகி பாபு... ஒரே வருடத்தில் 20 படம்
இந்நிலையில், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி 2018ம் ஆண்டின் பிக் பாஸ் சீசன் 2 வீட்டிற்குள் சென்றவர் யாஷிகா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.
தற்போது, இயக்குனர் புவன் நலன் இயக்கத்தில், வசந்த மற்றும் முத்துகுமார் தயாரிக்கும் ஜாம்பி படத்தில் யோகி பாபுவும், யாஷிகாவும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது.
January 2019
இந்த போஸ்டரை, நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி வெளியிட்டார். பிரபல யூடியூப் சேனல் நடத்துபவர்களும் இப்படத்தில் நடித்துள்ளதால் ஜாம்பிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.