scorecardresearch

இலங்கையில் கரை ஒதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள்: கரை ஒதுங்குவது ஏன்?

திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது என்பது பொதுவாக திமிங்கலங்கள் கடற்கரையில் நிலத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு நிகழ்வு. டால்பின்கள், கடற்பன்றி வகை போன்ற மற்ற நீர்வாழ் விலங்குகளும் கடற்கரையில் ஒதுங்குவதாக அறியப்படுகின்றன.

whale stranding, stranding, mass stranding, what is whale stranding, இலங்கையில் கரை ஒதுங்கிய 14 பைலட் திமிங்கலங்கள், திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது ஏன் நடக்கிறது, Tamil indian express, express explained

முன்னதாக பிப்ரவரியில், 14 பைலட் திமிங்கலங்கள் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கல்பிட்டி கரையில் கரை ஒதுங்கியது. கடற்படை குழு உள்ளூர் மீனவர்களின் உதவியுடன், 11 திமிங்கலங்கள் மீட்கப்பட்டன. ஆனால், அதில் 3 திமிங்கலங்கள் இறந்தன என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் பேசிய வனவிலங்கு அதிகாரி எரண்ட காமகே, “அவை (கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்) மீண்டும் கரைக்கு வராதபடி ஆழமான கடலுக்குள் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. கடற்படையினர் அவர்களை தங்கள் படகுகளில் ஏற்றிச் சென்று இறக்கிவிட்டனர்.” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் திமிங்கலங்கள் அலைந்து திரிவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. 2020-ம் ஆண்டில், பாணதுரையின் மேற்கு கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கடற்கரைக்கு வந்தபோது, ​​சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய திமிங்கல வருகையை நாடு கண்டது. அவைகளில் 3 திமிங்கலங்கள் மீட்புப் பணியின் போது உயிரிழந்தன. 2017-ம் ஆண்டில், சுமார் 20 பைலட் திமிங்கலங்கள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் காப்பாற்றப்படுவதற்கு முன்பு கிழக்கு கடற்கரையில் சிக்கித் தவித்தன.

இலங்கையைத் தவிர, ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவிலும் திமிங்கலங்கள் பெருமளவில் கடற்கரைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், 230-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் இப்பகுதியின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கின. அவைகளில் 170 திமிங்கலங்கள் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே இறந்தன.

திமிங்கலம் கரை ஒதுங்குவது என்றால் என்ன? ஏன் இப்படி நடக்கிறது?

திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது என்பது பொதுவாக திமிங்கலங்கள் கடற்கரையில் நிலத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு நிகழ்வு. டால்பின்கள், கடற்பன்றிகள் போன்ற மற்ற நீர்வாழ் விலங்குகளும் கடற்கரையில் ஒதுங்குகின்றன என்று அறியப்படுகின்றன. பெரும்பாலான கரைஒதுங்கும் நிகழ்வுகள் ஒரே விலங்கு கரை ஒதுங்குவதாக இருக்கும். ஆனால், சில நேரங்களில், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கடல் விலங்குகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கூட்டமாக கரை ஒதுங்குவது நடக்கும்.

அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே கூட்டமாக கடல் விலங்குகள் கரை ஒதுங்குவது நிகழ்ந்தாலும் – அப்போது, சிக்கித் தவிக்கும் திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் உணவு மற்றும் எண்ணெயின் வளமான ஆதாரமாக இருந்ததால் அவை கடவுளின் பரிசாகக் கருதப்பட்டன – நிபுணர்களுக்கு அவை ஏன் நிகழ்கின்றன என்பது சரியாகத் தெரியவில்லை.

மேக்வாரி பல்கலைக்கழகத்தில் (ஆஸ்திரேலியா) கடல் பாலூட்டிகளில் நிபுணத்துவம் பெற்ற வனவிலங்கு விஞ்ஞானி வனேசா பைரோட்டா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “திமிங்கலத்தின் கூட்டம் கரை ஒதுங்குவது மர்மமானது. அவை ஏன் நடக்கின்றன என்று எங்களுக்குத் தெரியவில்லை. இப்பகுதியின் நிலப்பரப்பு, நோய், மனித செயல்பாடுகள் மற்றும் பெருங்கடல்களில் அதிகரித்து வரும் ஒலி மாசுபாடு உள்ளிட்டவை கூட்டமாக அலைந்து திரிவதற்கான காரணம்” என்று கூறுகிறார்.

டாஸ்மேனியா, நியூசிலாந்தின் கோல்டன் பே மற்றும் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸின் கேப் கோட் ஆகியவை நீர்வாழ் விலங்குகளின் கடற்கரைக்கு முக்கிய இடங்களாகும். அலை மாறுபாடுகள் காரணமாக இங்குள்ள ஆழமான நீர் விரைவாக ஆழமடைவதால், இந்த பகுதிகள் சிக்கித் தவிக்கும் பல நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருப்பதாக வனேசா பைரோட்டா விளக்கினார்.

மனித செயல்பாடுகள் எப்படி திமிங்கலம் கரை ஒதுங்குவதற்கு காரணமாக இருக்கலாம்?

மனித தலையீடு காரணமாக பெருங்கடல்களின் ஆரோக்கியம் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது மிகவும் பொதுவானதாக மாறக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இத்தகைய சம்பவங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று கடல்களில் ஒலி மாசுபாடு அதிகரிப்பதாக இருக்கலாம்.

மோங்காபே (Mongabay) வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கையில் சமீபத்தில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வு இந்தியப் பெருங்கடலில் சமீபத்திய நில அதிர்வு நடவடிக்கை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

பெரிய வணிகக் கப்பல்கள், இராணுவ சொனார்கள் அல்லது கடல் துளையிடல் ஆகியவற்றிலிருந்து வரும் சத்தம், திமிங்கலங்கள் மற்றும் பிற கடல் விலங்குகளின் ஒலியைப் பயன்படுத்துவதற்கும், உணவைத் தேடுவதற்கும், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் கடுமையாகப் பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது அவைகளை செவிடாக்கி, திசைதிருப்பி அல்லது பயமுறுத்துவதன் மூலம் அவைகளைக் கரைக்கு விரட்டலாம்.

பைரோட்டா கூறுகையில், “சிலருக்கு, இது (ஒலி மாசுபாடு) ஒன்றுக்கொன்று பேசுவதற்கான இடத்தைக் குறைக்கும். ஒலி மாசுபாடு பெரிய சத்தமாக மாறும். மற்றவைகளுக்கு அது ஒரு திடீர் ஒலியாக இருக்கலாம். இது தனி கடல் விலங்குகளை பயமுறுத்துகிறது. இதனால், அவைகள் ஆழத்திலிருந்து வேகமாக மேலே எழும்” என்று கூறுகிறார்.

மற்றொரு காரணி, பெருங்கடல்களின் உயரும் வெப்பநிலை காரணமாக இருக்கலாம். இது இரை மற்றும் வேட்டையாடும் விநியோகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக திமிங்கலங்கள் கரைக்கு அருகில் வருகின்றன.

“திமிங்கலங்களும் டால்பின்களும் உணவு இருக்கும் இடத்தில் அடிக்கடி பயணிக்கின்றன. கடல் வெப்பநிலை மற்றும் நீரோட்டங்கள் போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்கள் காரணமாக இரையின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் திமிங்கலம் மற்றும் டால்பின் உணவு அமைந்துள்ள இடத்தில் ஒரு பங்குவகிக்கின்றன” என்று பைரோட்டா விளக்கினார்.

திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்குவதை தடுக்க முடியுமா?

“திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்குவதைத் தடுப்பது மிகவும் கடினம். பல காரணங்களால் கரை ஒதுங்குதல் நடப்பதால், அனைத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு தீர்வு வேலை செய்யாது. இருப்பினும், கடல் உயிரினங்களை பாதிக்கக்கூடிய மனித நடவடிக்கைகளை முயற்சிகளைக் குறைக்க கடலில் நமது செயல்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகளை குறைக்க உதவும்” என்று பைரொட்டா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: 14 pilot whales stranded in sri lanka why whale stranding happens

Best of Express