AYUSH Ministry on COVID-19: கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகள் குறித்து ஆயுஷ் அமைச்சகத்திலிருந்து பல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அமைச்சகம் பரிந்துரை செய்த நீண்ட பட்டியலில்; சர்பத்-ஏ-உன்னாப், திரியாக் அர்பா போன்ற யுனானி வகை மருந்துகளும், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் நோய்த்தடுப்புக்காக ஆர்சனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இல்லாத நிலையில், ஒருவர் மாற்று மருந்தைப் பயன்படுத்தலாமா?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி: “தற்போது வரை, சில மேற்கத்திய மருத்துவமும், பாரம்பரிய (அ) வீட்டு வைத்தியமும் வைரஸ் தொற்றின் அறிகுறிகளைத் தணித்து, ஆறுதல் அளித்தாலும், இவ்வகை மருத்துவத்தால் வைரஸ் தொற்றை தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அல்லது சிகிச்சையாக, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) உள்ளிட்ட எந்த மருத்துகளையும் சுய மருத்துவமாக எடுத்துக் கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை. எவ்வாராயினும், மேற்கத்திய மற்றும் பாரம்பரிய முறைகளை உள்ளடக்கிய கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான பல மருத்துவ பரிசோதனைகள் உலகெங்கிலும் நடைபெற்று வருகின்றன.
மாற்று மருந்து பயிற்சியாளர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாட்டை, அலோபதி மருத்துவர்கள் பெரும்பாலும் ஊக்குவிப்பதில்லை. ஏனெனில், மாற்று மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றையும் அவர்கள் மனதில் கொள்கின்றனர்.
தற்போது, கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சையாக சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துக்கைப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயினின் செயல்திறன்..... இன்னும் படிப்பினையில் இருந்தாலும், அதன் பாதுகாப்பு தன்மை பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பாரம்பரிய ‘வைத்தியம்’ எதற்கும் இதுபோன்ற தரவுகள் இல்லை.
கொவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மிகவும் புதியது. அதனின் இயல்பு குறித்து பல மட்டத்திலும், விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.