இந்திய நாடாளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் அரசியல் வாரிசுகள்... காரணம் என்ன?

தற்போது ஆட்சிப் பொறுப்பேற்கும் பாஜகவின் புதிய அரசிலும் கூட 30% பேர் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வருகிறார்கள்

Gilles Verniers, Christophe Jaffrelot

2019 Lok Sabha MPs dynasts culture : ஒரு பக்கம் குடும்ப அரசியல், அரசியல் வாரிசுகளின் அரசியல் பங்கீடு போன்றவை ஆட்சியில் எவ்வளவு பெரிய தாக்கங்களையும், மாற்றங்களையும், விமர்சனங்களையும் உருவாக்குகிறது என்று நாம் பார்த்து வருகின்றோம். நேரு துவங்கி, இன்று ராகுல் காந்தி வரை இந்த குடும்ப அரசியல் தொடர்ந்து வருவதாக புகார் அளித்துபடி தான் இருக்கிறது.

ஆனால், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்கும் பாஜகவின் புதிய அரசிலும் கூட 30% பேர் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வருகிறார்கள் என்று ஆய்வு அறிக்கை ஒன்று சொல்கிறது.

2016ம் ஆண்டு கஞ்சன் சந்திரா எடிட் செய்த புத்தகம் ஒன்றில் 2004 முதல் 2014ம் ஆண்டு வரை, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களில் 25% பேர் அரசியல் குடும்ப சூழலில் வாழ்ந்தவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : காங்கிரஸ் தோல்விக்கு மூத்த தலைவர்கள் தான் காரணம் – காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி ஆவேசம்

அசோகா பல்கலைக்கழகத்தில் இருக்கும் அரசியல் தரவுகளுக்கான திரிவேதி மையத்தின் (Trivedi Centre for Political Data) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சி.என்.ஆர்.எஸ் அமைப்பின் சி.ஈ.ஆர்.ஐ ஆகியோர் இணைந்து வெளியிட்ட ஸ்நிப்பர் ப்ரோஜெக்டில் இந்த அளவினை விட கூடுதலாகவே அரசியல் வாரிசுகள் இந்திய நாடாளுமன்றத்தை ஆக்கிரமிப்பு செய்தனர் என்று கூறுகிறது. தற்போதைய தரவுகளின் படி, புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 30% நபர்கள் அரசியல் வாரிசுகளாகவே உள்ளனர்.

மாநில கட்சி அரசியல் வாரிசுகள் Vs தேசிய கட்சிகளின் குடும்ப அரசியல்

தேசிய சராசரியை விட, மாநில அரசியலில் இவர்களின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. ராஜஸ்தானில் 32%, ஒடிசாவில் 33%, தெலுங்கானா 35%, ஆந்திரா 36%, தமிழகம் 37%, கர்நாடகா 39%, மகாராஷ்ட்ரா 42%, பிகார் 43% மற்றும் பஞ்சாப் 62% அரசியல் வாரிசுகளே தொடர்ந்து ஆட்சியினையும் அதிகாரங்களையும் தக்கவைத்துக் கொள்கின்றார்கள்.

இந்த வாரிசு அரசியல் அனைத்து மட்டங்களிலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சிலர் கருதுகின்றனர், மாநில கட்சிகளில் முதன்மை வகிக்கும் அரசியல்வாதிகள், தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதனை குடும்ப சொத்தாக பாவிக்கின்றார்கள் என்று கூறுவதும் உண்டு. ஆனால் அது உண்மையில்லை. அனைத்து மாநில அரசுகளிலும், தேசிய கட்சிகளின் முக்கியத்துவத்தின் கையே ஓங்கி நிற்கிறது.

பிகாரில் 58% அரசியல் வாரிசுகள் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள். வெறும் 14% மட்டுமே மாநில கட்சிகளை சார்ந்தவர்கள். ஹரியானாவில் 50% தேசிய கட்சியினர், 5% மட்டுமே மாநில கட்சியினர். கர்நாடாகவில் 35% வேட்பாளர்கள் தேசியக்கட்சியை சேர்ந்த அரசியல் வாரிசுகள். 13% மட்டுமே மாநில அரசியல் அரசியல் கட்சியினரின் வாரிசுகள்.

மகாராஷ்ட்ராவில் 35% தேசிய கட்சியினர் 19% மாநில கட்சியினர். ஒடிசாவில் 33% தேசிய கட்சியினர் 15% மாநில கட்சியினர், தெலுங்கானாவில் 32% தேசிய கட்சியை சேர்ந்தவர்கள். 22% மாநில கட்சியை சேர்ந்தவர்கள். உத்திரப் பிரதேசத்திலும் கூட மாநிலக் கட்சியின் அரசியல் வாரிசுகள் வெறும் 18% மட்டுமே. ஆனால் தேசிய கட்சியின் அரசியல்வாரிசுகள் 28%.

சில மாநில கட்சியினர் இந்த சராசரியை விட அதிக அளவு வேட்பாளர்களை களம் இறக்கினர். மதசார்பற்ற ஜனதா தளம் (66%), சிரோண்மணி அகாலி தளம் 60%, தெலுங்கு தேசம் 52%, ராஷ்ட்ரிய ஜனதா தளம் 38%, பிஜூ ஜனதா தளம் 38%, சமாஜ்வாடி கட்சி 30% அரசியல் வாரிசுகளை இந்த முறை களம் இறக்கியுள்ளது. இதில் பெரும்பான்மையான கட்சிகள் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய அளவிலான குடும்ப அரசியல் நடத்தும் கட்சி சமாஜ்வாடி ஆகும்.

தேசிய கட்சிகளில் அதிக அளவு குடும்ப வாரிசுகளைக் கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ் தான். 31%. ஆனால் அதனை தற்போது முறியடிக்கும் வேகத்தில் இயங்கி வருகிறாது பாஜக. 22%.

பாஜக ஆரம்ப காலம் முதல் குடும்ப அரசியலுக்கு எதிராக பேசி வந்தது. இது ஜனநாயத்திற்கு எதிரானது என்றும் கருத்துகளை பதிவு செய்தது. தற்போது வெளியேறும் பாஜகவின் 282 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 100 பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பினை மறுத்திவிட்டது பாஜக. ஆனால் அரசியல் வாரிசுகள் குறித்த தன் நிலைப்பாட்டில் சறுக்கிவிட்டதா பாஜக?

பெண்களுக்கான இடம்

இம்முறை வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அரசியல் வாரிசுகளில் ஆண் வாரிசுகளை விட பெண் வாரிசுகளே மிக அதிகம். சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் கட்சி, திமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகளில் இருந்து களம் இறக்கப்பட்ட பெண்களில் 100% பேர் அரசியல் பின்புலக் கொண்ட குடும்ப வாரிசுகளே!

காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கும் இது பொருந்தும். 54% மற்றும் 53% என்ற சதவிகிதத்தில் இவ்விரு கட்சிகளும் முறையே தங்களின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.  இந்தியாவிலேயே குடும்ப அரசியல் என்ற பதம் சாராத கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கூட இம்முறை அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களில் வந்த பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

ஒரு கட்சியில் தங்களின் செல்வாக்கினை உறுதி செய்வதற்காகவே வாரிசு அரசியல் பயன்படுகிறது. இதற்கு மற்றும் ஒரு காரணம், அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இருந்து வரும் உறுப்பினர்கள், மற்ற வேட்பாளர்கள்/தலைவர்களைக் காட்டிலும் சிறப்பாக அரசியலில் பங்காற்றுவதும் ஆகும். மறுபடியும் மறுபடியும் மக்கள் ஏன் இந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து, தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள் என்பது மட்டுமே விடை தெரியாத கேள்வியாக இன்றும் இருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close