காங்கிரஸ் கட்சியின் சமகால வரலாற்றில் இந்த நெருக்கடி ஏன் மாறுபட்டது?

23 Congress leaders letter to sonia : மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலும், தங்கள் எதிர்ப்புக் குரலை மிகவும் அரிதாக, கடைசி முயற்சியாக தான்  பொது வெளியில் பதிவு செய்வார்கள்.

Manoj C G

கட்சியில் அடிப்படை சீர்திருத்தங்கள் வேண்டி 23 காங்கிரஸ் தலைவர்கள்  எழுதிய கடிதம், கட்சிக்குள் நிலவும் அசாதாரண சூழலையும், சந்திக்க வேண்டிய  சவால்களையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடிக்கோடிட்டுள்ளது .

நாளை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு (சி.டபிள்யூ.சி) கூட்டத்தில் இந்த மோதல் போக்கு அப்பட்டமாக வெளிப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிக்குள்  உருவாகிய எதிர்ப்புக் குரலை, மாற்று சிந்தனையை, மக்கள் பார்வையில் இருந்து அதிக நாட்கள் மறைக்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முதற்கட்ட நடவடிக்கையாக,  கட்சியில் மிகப்பெரிய  மறுசீரமைப்பு நடவடிக்கைகள்  திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அது போதாது.

ஏனெனில் , பெரும்பாலான மூத்த காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் எதிர்ப்புக் குரலை மிகவும் அரிதாகவும், கடைசி முயற்சியாகவும் தான் பொது வெளியில் பதிவு செய்வார்கள் என்று அறியப்படுகிறது. இந்த கடிதம் நேரு-காந்தி குடும்பத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக காணப்படுகிறது, காங்கிரஸ் கட்சியின் சமகால வரலாற்றில் இது ஒரு அசாதாரண நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

ஐந்து முன்னாள் முதலமைச்சர்களும் , பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பி.சி.சி தலைவர்கள்  ஆகியோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர். அதாவது, சமீபத்திய இந்திய அரசியல் வரலாற்றில்  பல்வேறு மாநிலங்கள், வயதுப் பிரிவில் உள்ள பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள்  மிகப்பெரிய அணியாக ஒன்றிணைந்து, கட்சி சீர்திருத்தங்கள் வேண்டும் பதிவு செய்வது அரிதாக உள்ளது. அவர்களில் பலர், அரசியல் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும், முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பதால், கட்சித் தலைமை அவர்களை புறக்கணிப்பது கடினம்.

 

1969 ஆம் ஆண்டில், இந்திரா காந்திக்கும் –  காமராஜர், மொரார்ஜி தேசாய், எஸ். நிஜலிங்கப்பா ஆகியோரின் தலைமையிலான “சிண்டிகேட்” குழுவுக்கும் நடந்த பலப்பரீட்சை, 80 களின் பிற்பகுதியில் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு வெளியேறிய வி பி சிங் ; 1990 களின் பிற்பகுதியில் ஜெகசீவன்ராம் போன்ற பலர் கட்சியை விட்டு வெளியேறிய அரசியல் சூழல்; சோனியா காந்தியை முன்னிலைப்படுத்தும்  நோக்கில், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியை கட்சியில் இருந்து வெளியேற்ற நடந்த கிளர்ச்சி   போன்ற முந்தைய நெருக்கடிகளிலிருந்து தற்போதைய நிலை மாறுபடுகிறது.

தற்போது, அந்தக் கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது. அதன், தேர்தல் செயல்திறன் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வழிதெரியாமல் கட்சி பயணிக்கிறது, தெளிவற்ற கட்சித் தலைமை போன்ற பரவலான கருத்து காங்கிரஸ் ஆதரவாளர்களிடத்தில் கூட நிலவி வருகிறது. இந்த எதிர்ப்புக் குரலில் இன்னும் பலர் சேர இருப்பதால், நேரு-காந்தி குடும்பத்திற்கு மிகப்பெரிய  அழுத்தம் ஏற்படக்கூடும். தற்போதைய கடிதம் கூட, ஆகஸ்ட் முதல் வாரத்தில் சச்சின் பைலட்-அசோக்  கெலாட் இடையிலான மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் இருந்தபோது எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்த கடிதம், மிகப்பெரிய கிளர்ச்சியாக உருவாகவில்லை என்றாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து, தலைமையின் கவனத்தை ஈர்க்க குரல் கொடுத்திருப்பது சமீபத்திய காங்கிரஸ் வரலாற்றில் முன்னோடியில்லாதது. கட்சி விதிமுறையின் கீழ், ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டவர்களாவார்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். கடிதத்தில் ராகுல் காந்தி பற்றிய நேரடி குறிப்பு இல்லை என்றாலும், கட்சித் தலைமை  வெளியுறவுக் கொள்கை, எல்லை மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் தெளிவான நிலைப்பாட்டை வெளிபடுத்த வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்தனர்.

 

 

முன்னதாக, சீனா எல்லை மோதல் போன்ற முக்கிய பிரச்சனைகளில்   ராகுல் காந்தியின் தொடர்ச்சியான ட்வீட் செய்திக் குறிப்புகள் முதிர்ச்சியற்றவையாகவும், முன் அறிவிப்புமின்றி இருப்பதாக  கட்சிக்குள் கருத்து நிலவி வந்தது.

 

 

கையொப்பமிட்டவர்களில் பலர் , வாழ்நாளின் பெரும் பகுதியை கட்சிக்காக உழைத்தவர்கள். கட்சியை விட்டு வெளியேறவோ (அ) விசுவாசத்தை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்கள். பலர், நல்ல நிலையை அடைந்தவர்கள்.  இதுவரை, கட்சிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகளை  மூத்த மற்றும் இளம் தலைவர்கள் என்ற தொகுப்பின் கீழ் காங்கிரஸ் அடக்கி வைத்திருந்தது . ஆனால், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, பூபிந்தர் ஹூடா, வீரப்ப மொய்லி கபில் சிபல்,  தொடங்கி முகுல் வாஸ்னிக்,  பிருத்விராஜ் சவான்,  ஜிதின் பிரசாதா, மிலிந்த் தியோரா, மனிஷ் திவாரி உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 23 congress leaders letter to sonia why it is different from earlier crises

Next Story
திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமம் கையகப்படுத்துவதில் என்ன பிரச்சினை ?Kerala, Thiruvananthapuram airport, Adani group, Kerala government, PPP, union cabinet, thiruvananthapuram, thiruvananthapuram airport, privatisation of thiruvananthapuram airport, airport privatisation, adani thiruvananthapuram airport, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com