2019 பருவமழையில் 2,400 மனித உயிர்கள் பலி – முதலிடத்தில் மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் 674 பேரும், மகாராஷ்டிரா (253), மேற்கு வங்கம் (227), குஜராத் (195) மற்றும் பீகார் மற்றும் உ.பி. (தலா 133) பேர் பலியாகினர்

By: November 21, 2019, 5:01:53 PM

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளத்தால் 24 மாநிலங்களில் 2,391 மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. தவிர 15,729 கால்நடைகள் இறந்தன.

தென்மேற்கு பருவமழை பொதுவாக ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தொடங்கும் அதே வேளையில், இந்த இறப்புகள் ஜூன் 1 முதல் நவம்பர் 14 வரை பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வின் போது உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சகம், வெள்ளம், நிலச்சரிவு, மேகமூட்டம் மற்றும் பிற நீர்-வானிலை அபாயங்களால் 8,00,067 வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் 63.97 லட்சம் ஹெக்டேர் பயிர் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தது.

மத்திய பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் 674 பேரும், மகாராஷ்டிரா (253), மேற்கு வங்கம் (227), குஜராத் (195) மற்றும் பீகார் மற்றும் உ.பி. (தலா 133) பேர் பலியாகினர்.

மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையிலான கால்நடை இறப்புகள் 4,230 ஆகவும், கர்நாடகா (3,400), மத்தியப் பிரதேசம் (1,888), கேரளா (1,183), குஜராத் (848) என்று பதிவாகியுள்ளன. அசாமில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 1,31,949. தொடர்ந்து மத்திய பிரதேசம் 1,18,386, கர்நாடகா 1,15,792, மகாராஷ்டிரா 1,09,714, மேற்கு வங்கம் 83,787 என்று பதிவாகியுள்ளன.

லட்சம் ஹெக்டேரில் சேதமடைந்த மிகப்பெரிய பயிர் பகுதியாக ராஜஸ்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 27.36 லட்சம் ஹெக்டேர் கர்நாடகா (9.35), உ.பி. (8.88), மத்தியப் பிரதேசம் (6.04), மகாராஷ்டிரா (4.17) என்று பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் பெறப்பட்ட பருவமழை மழையானது இயல்பை விட 152 சதவீதம் அதிகமாகும், மேலும் 560 க்கும் மேற்பட்ட தீவிர மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:2400 human lives lost due to 2019 monsoon highest in madhya pradesh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X