scorecardresearch

3 மாநிலங்கள்; 3 மதமாற்ற தடை சட்டங்கள்… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

, அவசர சட்டம் பிரிவு 11ன் கீழ் இந்த மதமாற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.

3 மாநிலங்கள்; 3 மதமாற்ற தடை சட்டங்கள்… நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

 Apurva Vishwanath 

3 states, 3 anti-conversion laws: what’s similar, what’s different: திருமண நோக்கத்திற்காக மட்டும் மதமாறுவதை சட்டவிரோதமாக்கும் மத மாற்ற தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய பிரதேச மாநிலம் உ.பி. மற்றும் ஹிமாச்சல் மாநிலங்களை பின்பற்ற உள்ளது. மத சுதந்திரத்திற்கான மசோதா 2020வை அவசர சட்டமாக அறிவிக்க ம.பி.யின் கேபினட் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த மூன்று சட்டங்களிலும் பொதுவாக இருப்பது இப்படியான திருமணங்களை செல்லாது என்று அறிவித்தல், முன் அனுமதி இல்லாமல் செய்யப்பட்ட மதாமாற்றத்திற்கு அபராதம் விதித்தல் ஆகியவை ஆகும். ஆனால் தண்டனைகளில் மாற்றங்கள் உள்ளன. ம.பி.யின் புதிய சட்டம், இது போன்ற திருமணங்களில் பெண்களில் உரிமைகளை பாதுகாக்க முயல்கிறது.

முன் அறிவிப்பு

ம.பியின் இந்த சட்டம் 60 நாட்களுக்கு முன்பே, மதமாற்றம் செல்லுபடியாக மாவட்ட ஆட்சியாளரிடம், மாற்றத்திற்கான நோக்கத்தை அறிவிக்க வேண்டும். அதனை தொடர்ந்து வெவ்வேறு மதத்தினை சேர்ந்த ஆணும் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.

உ.பி.யில் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Prohibition of Unlawful Conversion of Religious Ordinance, 2020 சட்டமும் 60 நாட்கள் முன் அறிவிப்பை கோருகிறது. அதே சமயத்தில் மாவட்ட ஆட்சியர், இந்த மதமாற்றத்திற்கு பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய காவல்துறை விசாரணையை நடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த Himachal Pradesh Freedom of Religion Act, 2019 சட்டத்திலும் 30 நாட்களுக்கு முன்பே மத மாற்றம் செய்து கொள்வதற்கான காரணங்களை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

யார் இதனை விசாரிப்பார்கள்?

ம.பியின் சட்டத்தின் நான்காவது பிரிவில், மதமாற்றம் செய்து கொண்டவர் அல்லது அவரின் பெற்றோர்கள்/உடன் பிறந்தவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே காவல்துறை விசாரணை இருக்கும். மாற்றப்பட்ட நபரின் கார்டியங்கள் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே புகார் அளிக்க முடியும். சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழே உள்ள எந்த காவல்துறை அதிகாரியும் இந்த சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை விசாரிக்க முடியாது என்றும் எம்.பி. சட்டம் கூறுகிறது.  சப்-டிவிசனல் மஜிஸ்திரேட் தகுதிக்கு கீழே இல்லாத ஒரு அதிகாரியின் முன் அனுமதி இல்லாமல் விசாரணையை துவங்க இயலாது என்று ஹிமாச்சல் கூறுகிறது.  மத்திய பிரதேசம் போன்றே உ.பியிலும் மதமாற்றம் செய்த நபரே புகாரை வழங்க முடியும்.

நிரூபணம்

மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது ம.பியின் சட்டம். இமாச்சல் பிரதேசத்தின் சட்டத்திலும் இந்த கூறு இடம் பெற்றுள்ளது. உ.பி. மேலும் ஒரு படி முன்னேறி, இந்த மதமாற்றத்திற்கு காரணமாக அமைந்தவர்கள் மீது சுமையை வைக்கிறது. காவல்துறை விசாரணையின் போது, மஜிஸ்திரேட் திருப்தி அடையவில்லை என்றால், அவசர சட்டம் பிரிவு 11ன் கீழ் இந்த மதமாற்றத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். குற்றம் செய்தவர்களும் இதில் அடங்குவார்கள்.

குழந்தைகள் பாராமரிப்பு

அரசிடம் முன்னறிவிப்பு தராமல் கணவனோ அல்லது மனைவியோ சம்மதத்துடன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அந்த திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்று ம.பி.யின் சட்டம் கூறுகிறது. மேலும் அதே நேரத்தில் இந்த திருமணத்தில் இருந்து பெண்கள் மற்றும் அவரின் குழந்தைகளை பாதுகாப்பதாக அறிவிக்கிறது. மேலும் பிரிவு 9ன் கீழ் செல்லுபடியாகாது என்று அறிவிக்கப்பட்ட திருமணத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு குழந்தைகளை பராமரிக்க உரிமை உண்டு. இருப்பினும் கூட இது போன்ற திருமணங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு வழியையும் சட்டம் வழங்கவில்லை. உ.பி. மற்றும் இமாச்சல் பிரதேசத்தின் சட்டங்களிலும் இந்த பாதுகாப்புகள் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

தண்டனையின் அளவு

மூன்று மாநிலங்களிலும் சட்டத்திற்கு புறம்பான மதமாற்றம் குற்றமாகும். மேலும் ஜாமீனில் வெளியே வரமுடியாது. வாரண்ட் இல்லாமல் கைது செய்வதை இந்த சட்டம் அனுமதிக்கிறது. மேலும் ஜாமீன் வழங்கப்படுவது நீதிபதியின் கையிலே உள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக மதமாற்றம் செய்ய முயல்தலுக்கு ம.பியின் சட்டப்படி ஒன்று முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம். மதமாற்றம் செய்யப்பட்டவர் பெண் அல்லது சிறுபான்மையினர் அல்லது பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினராக இருந்தால் தண்டனை 10 ஆண்டுகளாகும். ஒருவரின் மதத்தை மறைத்து திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு தண்டனை 3 முதல் 10 ஆண்டுகளாகும்.

உ.பி. சட்டம் குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கிறது, இது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம், மேலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் குற்றங்கள் அதிகபட்ச தண்டனையை விட இருமடங்காகும். ஒரு பெண், மைனர் அல்லது எஸ்சி / எஸ்டியைச் சேர்ந்த ஒரு நபரை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டால் ஆண்களுக்கு அதிக தண்டனை வழங்கப்படுகிறது – இந்த வழக்கில் இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்.

இமாச்சல சட்டத்தில், சட்டவிரோதமாக மாற்ற முயற்சித்ததற்காக ஒரு நபருக்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மத மாற்றம் செய்யப்பட்ட நபர் ஒரு பெண், மைனர் அல்லது எஸ்சி / எஸ்டியைச் சேர்ந்தவர் என்றால், தண்டனை இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும்.

ம.பி, ஹிமாச்சல் பிரதேசம் உட்பட 10 மாநிலங்களில் ஏற்கனவே மதமாற்ற தடை சட்டம் உள்ளது. ஆனால் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் திருமண பந்தத்திற்காகவே மதம் மாற முற்படுபவர்களையே குற்றவாளிகளாக்க முற்படுகிறார்கள்.

ம.பியின் அவசர சட்டம் மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டம், 1968ஐ ரத்து செய்கிறது. கட்டாய மதமாற்றத்தை குற்றமாக அறிவித்திருந்தாலும், புதிய சட்டம் திருமணத்தின் போது மதமாற்றம் செய்வது, பாதுகாப்பு உரிமைகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆதார சுமையை மாற்றி அமைத்தல் தொடர்பான விதிகளையும் சேர்க்கிறது.

இமாச்சலப் பிரதேச மதமாற்ற சுதந்திரச் சட்டம், 2006ஐ ரத்து செய்து, 2019ல் ஹிமாச்சல் புதிய சட்டத்தை நிறைவேற்றியது. 2019 சட்டம் திருமண நோக்கத்திற்காக மாற்றங்கள் தொடர்பான விதிகளைச் சேர்த்துள்ள நிலையில், மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் முன் அறிவிப்பை வழங்கும் நடைமுறை 2006 சட்டத்திலும் இருந்தது. உயர்நீதிமன்றம் முன் அறிவிப்பு விதிகளை அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இருந்தது என்று குறிப்பிட்டது.

2019 ஆம் ஆண்டில், உ.பி. மாநில சட்ட ஆணையம் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட சம்பவங்களுக்கு தீர்வு காண சிறப்புச் சட்டத்தை பரிந்துரைத்தது. அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதாவில், திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதமாற்றம் உள்ளிட்ட மோசடி மாற்றங்களுக்கு அபராதம் விதிக்கவும் பரிந்துரை செய்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: 3 states 3 anti conversion laws whats similar whats different